உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆளில்லாமல் ஓடிய பஸ் வீட்டு சுவர் சேதம்

ஆளில்லாமல் ஓடிய பஸ் வீட்டு சுவர் சேதம்

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று காலை 10:00 மணிக்கு டிரைவர் நாகராஜ், கண்டக்டர் முருகேசன் பஸ்சை நிறுத்தி விட்டு டிப்போவுக்குள் சென்றனர். பஸ்சை மேடான இடத்தில் நிறுத்தி இருந்ததால், பள்ளத்தில் சறுக்கி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை கடந்து, 200 அடி துாரம் தறிகெட்டு ஓடி, சத்யா என்பவரது வீட்டின் சுவர் மீது மோதி நின்றது.இந்த பஸ், தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற போது, சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் டிரைவர் இன்றி பஸ் செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர், ஜே.சி.பி., இயந்திர உதவியுடன் பஸ் மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை