உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் கோயிலில் இன்று ஆடித்திருவிழா கொடியேற்றம்

ராமேஸ்வரம் கோயிலில் இன்று ஆடித்திருவிழா கொடியேற்றம்

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடக்கிறது.இக்கோயிலில் ஆடித்திருக்கல்யாணம் விழா இன்று துவங்கி ஆக.14 வரை நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 9:00 மணிக்கு கோயில் அம்மன் சன்னதி முன்புள்ள கொடிகம்பத்தில் கொடியேற்றம் நடக்கிறது. ஆக.,4ல் ஆடி அமாவாசை அன்று அக்னி தீர்த்த கடற்கரையில் ராமர் எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.ஆக., 6ல் கோயில் ரதவீதியில் ஆடித்தேரோட்டம், ஆக.,8ல் சுவாமி, அம்பாள் தபசு மண்டகப்படியில் மாலை மாற்றுதல், ஆக., 9ல் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆக.,14ல் சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருளல் நடக்கிறது. 17 நாட்கள் நடக்கும் ஆடித் திருவிழாவில் தினமும் பர்வதவர்த்தினி அம்மன் தங்கம், வெள்ளி வாகனத்தில் உலா வருவார். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை