உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழில் உற்பத்தியில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய குஜராத்

தொழில் உற்பத்தியில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளிய குஜராத்

சென்னை:''நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில், குஜராத் மாநிலத்தின் பங்களிப்பு சிறப்பானது,'' என, கவர்னர் ரவி கூறினார்.சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், நேற்று குஜராத் மாநிலம் உருவான தின விழா கொண்டாடப்பட்டது. இதில், தமிழகத்தில் வாழும் குஜராத் மாநில மக்கள் பங்கேற்று, பாரம்பரிய குஜராத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.கவர்னர் ரவி பேசியதாவது: நம் நாடு, அரசர்களாலும், சர்வாதிகாரிகளாலும் உருவாக்கப்படவில்லை. ரிஷிகர்களாலும் முனிவர்களாலும், அவர்களின் வாழ்வியல் முறைகளாலும் ஆயிரம் ஆண்டு காலமாக வடிவமைக்கப்பட்டது. சர்தார் வல்லபபாய் படேல், இந்தியாவின் இரும்பு மனிதர். 560 சுதந்திர நாடுகளை ஒன்றிணைத்து, ஒற்றை பாரதமாக ஆக்கினார். அவரின் பங்கை பாராட்ட வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்கு செயலாற்றியதில் ஒருவரை பாராட்ட வேண்டும் என்றால், அது சர்தார் வல்லப பாய் படேல் தான்.நாடு சுதந்திரம் அடைந்தபோது, 15 மாகாணங்களாக இருந்தோம். பின்னர் மொழிவாரி மாநிலமாக பிரிக்கும்போது, அதிக மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளை இணைத்தே குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டது. நாட்டில் பல பகுதிகளை சேர்ந்தவர்களும் தமிழத்தில் உள்ளனர். தமிழ் மொழி பேசுபவர்கள், பாரத நாட்டில் பல பகுதிகளிலும் உள்ளனர். இது தான் பாரதம். இதுபோல் பாரதத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும், சின்னதாக இன்னொரு மினி பாரதத்தை பார்க்க முடியும்.நாட்டின் வளர்ச்சிக்கு குஜராத் மாநிலம் மிக சக்தி வாய்ந்த இன்ஜின் போல் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில், குஜராத் மாநிலம் பங்களிப்பு சிறப்பானது. தொழில் உற்பத்தி விகிதத்தில், குஜராத் தான் நாட்டில் முதல் மாநிலம். நாட்டின் மொத்த தொழில் உற்பத்தியில் குஜராத் 18 சதவீத பங்கு வகிக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழகம்தான் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக உள்ளது. ஆனால், உற்பத்தியில் 10 சதவீதம் தான் பங்கு வகிக்கிறது. குஜராத் தான் நாட்டிற்கு வழிகாட்டியாகவும், வழிநடத்தும் மாநிலமாகவும் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை