உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடத்தலில் கிடைத்த ரூ.21 கோடி; முக்கிய புள்ளிகளுக்கு ஜாபர் பங்கு

கடத்தலில் கிடைத்த ரூ.21 கோடி; முக்கிய புள்ளிகளுக்கு ஜாபர் பங்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தில், 21 கோடி ரூபாயை, ஜாபர் சாதிக் சில முக்கிய புள்ளிகளுக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.சென்னையை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35, மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு ஆகியோரின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். அமீனா பானுவின் வங்கி கணக்கில் இருந்து, சினிமா பட இயக்குனர் அமீருக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் அனுப்பப்பட்டுள்ளது.இது, போதை பொருள் கடத்தலில் சம்பாதித்த பணம் என்பதை, ஜாபர் சாதிக் உறுதி செய்துள்ளார். அமீனா பானுவை வரவழைத்தும் விசாரித்துள்ளோம். தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறுகிறார். ஆனால், வெளிநாடுகளில் இருந்து, அமீனா பானுவின் வங்கி கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.அதேபோல, ஜாபர் சாதிக்கின் இரண்டாவது தம்பி மைதீன் வங்கி கணக்கில் பதிவாகியுள்ள பண வரவுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. ஜாபர் சாதிக் வாயிலாக, சில முக்கிய புள்ளிகளுக்கு, 21 கோடி ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. விசாரணையை பாதிக்கும் என்பதால், அவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.போதை பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணம், பேரீச்சம் பழம் இறக்குமதி வியாபாரத்தில் ஈடுபட்டது போல கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில், முக்கிய நபராக மார்க்க நெறியாளர் என்று, கூறப்படும் அப்துல் பாசித் உள்ளார்; அவரையும் விசாரிக்க உள்ளோம்.ஜாபர் சாதிக் வலதுகரமாக, சென்னை ஆவடியைச் சேர்ந்த ஜோசப், 45, மற்றும் ஆயிஷா, 38, ஆகியோர் செயல்பட்டுள்ளனர். ஜாபர் சாதிக், வெளிநாடுகளில் உள்ள சர்வதேச போதை பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொள்ளும் பொறுப்பை ஜோசப்பிடம் ஒப்படைத்துள்ளார். அதை வாக்குமூலமாகவும் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு தொடர்புகளை ஜோசப் மற்றும் அவரது மனைவி ஆயிஷா ஆகியோரின் வங்கி கணக்கு விபரங்கள் உறுதி செய்கின்றன. ஜாபர் சாதிக், பல கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுக்கிறார். அவரது தம்பி மைதீனுக்கு, 'சம்மன்' அனுப்பியும் தலைமறைவாக உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

D.Ambujavalli
ஜூலை 23, 2024 16:29

இதைத்தான் சொல்வார்களோ 'தம்பி உடையான் வழக்குக்கு அஞ்சான் ' என்று?


krishna
ஜூலை 23, 2024 12:18

SANADHANAM OZHIKKA PURAPPATTA SENGAL THIRUDAN AVARGALAI TIHAR SIRAYIL POTTAL DELHIYIL SANADHANATHAI OZHITHU INDHIA MUZHUVADHUM DRAVIDA MODEL AATCHI KONDU VARUVAAR.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 23, 2024 11:40

India will become Islamic country with largest Mslm population by 2050.


R K Raman
ஜூலை 23, 2024 11:18

போதை மருந்து கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை தானே? இவருக்கு எப்படி ஜாமீன் வழங்கப்பட்டது? மத்திய அரசு என்ன செய்கிறது? கூட்டணிக் கட்சிகள் தங்கள் பழைய நண்பர்களுக்கு உதவி வருகிறார்களா? எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய பிறகு வேறு என்ன நடக்கும்??


Shekar
ஜூலை 23, 2024 11:35

நம்ம உழுத்து போன சட்டத்திற்கு மத்திய அரசு என்ன செய்யும். சிவகங்கை சீமான் ஆயுட்கால பெயில் வாங்கி ஜாலியா இருக்கார், லாலு உடம்பு சரியில்லை என்று பரோலில் வந்து அம்பானி வீட்டு கல்யாணத்தில் நடனமாடுகிறார். ஆறு ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்ட நம்ம ராகுல் அய்யா தீர்ப்பை நிறுத்தி ரெண்டு தொகுதியில் ஜெயிக்கிரார். எல்லாம் கலிகாலம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 23, 2024 12:13

\\ இவருக்கு எப்படி ஜாமீன் வழங்கப்பட்டது?// தேர்தல் பத்திரங்களையும் உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டால் பாஜக பணத்துக்கு என்னதான் செய்யும் ????


S.V.Srinivasan
ஜூலை 23, 2024 11:01

21 கோடி பங்கு போட்டாச்சு சரி. பாக்கி யாருக்கு??


Anand
ஜூலை 23, 2024 10:59

இவன் சர்வதேச போதை மருந்து கடத்தல் பேர்வழி என்றும், தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கு திருட்டு திராவிஷ தலைமைக்கு கப்பம் கட்டி தன்னோட வியாபாரத்தை விரிவாக்கம் செய்து கொண்டுள்ளான் என ஊர் உலகமே அறிந்த விஷயம், என்னமோ தான் உத்தமன் என பெரிய பில்டப்பு கொடுக்கிறான் இந்த யோகியசிகாமணி ஜாபர் சாதிக்......


Swaminathan Nath
ஜூலை 23, 2024 10:23

அமீனா பானுவின் வங்கி கணக்கில் இருந்து, சினிமா பட இயக்குனர் அமீருக்கு 3 கோடி ரூபாய்க்கு மேல் அனுப்பப்பட்டுள்ளது.//அமீர் தன்னை யோக்கியன் போல காண்பித்து கொண்டுள்ளார், கூட்டு களவாணி, அவனையும் கைது செய்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும், ஜாபிர் கூட்டாளிகள்எல்லோரையும் விஜாரிக வேண்டும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வேண்டும்,


Barakat Ali
ஜூலை 23, 2024 10:16

திராவிடமாடலின் தலைமையைத் தவிர மற்ற அனைத்தையும் தொட்டுப்பார்ப்பார்கள் போலிருக்கிறது ...... திரைமறைவில் ஏதோ நடந்துள்ளது .........


Dharmavaan
ஜூலை 23, 2024 10:02

இதை மத்திய போலீஸ் கையாள வேண்டும். இல்லையேல் மூடப்படும்


sridhar
ஜூலை 23, 2024 08:40

யார் எக்கேடு கேட்டால் என்ன, சமூகம் எப்படி சீரழிந்தால் என்ன , ஒரு திராவிட வாக்காளனுக்கு ஆயிரம் ருபாய் போதும் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை