மேலும் செய்திகள்
17 ஊராட்சிகள் 37 ஆக பிரிப்பு
2 hour(s) ago
சென்னை: கொடைக்கானல் பஸ் நிலையம் அருகே, விளம்பர பலகை பொருத்தப்பட்ட, 'சிக்னல் போஸ்ட்' சாய்ந்த விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு, 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.கொடைக்கானல் பஸ் நிலையம் அருகே, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, திடீரென பலத்த காற்று வீசியது. இதில், விளம்பரப் பலகை பொருத்தப்பட்ட, 'சிக்னல் போஸ்ட்' எதிர்பாராதவிதமாக சாய்ந்ததில், அப்பகுதியில் தள்ளுவண்டியில் இலைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த, கொடைக்கானல் தெரசா நகரைச் சேர்ந்த அந்தோணிதாஸ், 55, பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல் தெரிவித்ததுடன், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.
2 hour(s) ago