உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்பில், 25,000 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வழி விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் இன்றுமுடிகிறது. வரும் 27ல் தரவரிசை பட்டியல் வெளியாகும்; 28ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்கிறது._____________தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் செயல்படும், 600க்கும் மேற்பட்ட பி.எட்., கல்லுாரிகளில், பி.எஸ்சி., -- பி.எட்., மற்றும் பி.ஏ., - பி.எட்., செமஸ்டர் தேர்வுகள், வரும் 27ல் துவங்கி, ஜூன் 10 வரை நடக்கும் என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது. மேலும் விபரங்களை, https://tnteu.ac.in/notifications.php?nid=5 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்