மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
13 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
16 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
24 minutes ago
சென்னை:''முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள், அண்ணா பல்கலையின் கீழ் பணியாற்ற நிரந்தர தடை விதிக்கப்படும்,'' என, அண்ணா பல்கலை துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறினார். சென்னை கால்நடை மருத்துவ பல்கலை விழாவில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:அண்ணா பல்கலையின் கீழ் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி, பேராசிரியர்கள் சிலர் பல கல்லுாரிகளில் பணியாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பான அறிக்கையை, கவர்னரிடம் தாக்கல் செய்துஉள்ளோம். கடந்த 2022 - 23ம் கல்வியாண்டில், 292 கல்லுாரிகளிலும், 2023 - 24ல், 295 கல்லுாரிகளிலும் முறைகேடுகள் நடந்ததாக கண்டறிந்து உள்ளோம். இந்த கல்லுாரிகளுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.இந்த விவகாரத்தில், உயர்கல்வித் துறையும் கமிட்டி அமைத்துள்ளது. கல்லுாரிகள் தரும் விளக்கத்தை கமிட்டிக்கு அனுப்ப உள்ளோம். வரும் காலங்களில், இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில், பேராசிரியர்கள் மீது தவறா; கல்லுாரிகள் மீது தவறா என்ற விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்த பேராசிரியர்கள், அண்ணா பல்கலையின் கீழ் பணியாற்றுவதில் இருந்து நிரந்தர தடை விதிக்கப்படும்.இவ்வாறு ஆர்.வேல்ராஜ் கூறினார்.
13 minutes ago
16 minutes ago
24 minutes ago