உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ படிப்புக்கு தரவரிசை வெளியீடு பொதுப்பிரிவு கவுன்சிலிங் நாளை துவக்கம்

மருத்துவ படிப்புக்கு தரவரிசை வெளியீடு பொதுப்பிரிவு கவுன்சிலிங் நாளை துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எம்.பி.பி.எஸ்., --- பி.டி.எஸ்., படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. விழுப்புரத்தைச் சேர்ந்த நாமக்கல் பள்ளி மாணவர் ராஜநீஷ் முதலிடம் பிடித்துள்ளார்.தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லுாரிகள், சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி; 22 சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள்; மூன்று அரசு பல் மருத்துவக் கல்லுாரிகள்; 20 சுயநிதி பல் மருத்துவக் கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., - 2,150 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கான, நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, 43,063 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியலை, சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.அதன்படி, அரசு ஒதுக்கீட்டுக்கு 28,819 பேர்; 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 3,683 பேர்; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,417 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.இது குறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:தரவரிசை பட்டியல், https://tnhealth.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில், நீட் தேர்வில் 720 முழு மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, நாமக்கல் பள்ளி மாணவர் ராஜநீஷ் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், 715 மதிப்பெண்ணுடன் சென்னையைச் சேர்ந்தவர்கள் சையத் ஆரிபின் யூசுப், சைலஜா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில், 669 மதிப்பெண் எடுத்த கிருஷ்ணகிரி மாணவி ரூபிகா முதலிடம்; 668 மதிப்பெண்ணுடன் சேலம் மாணவி காய்தரிதேவி இரண்டாம் இடம்; 665 மதிப்பெண்ணுடன் திருவண்ணாமலை மாணவி அனுசுயா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த ஒதுக்கீட்டில், முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் நான்கு பேர், சென்னை சைதாப்பேட்டையில் அரசு நடத்தும் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்தவர்கள்.பொதுப்பிரிவு கவுன்சிலிங் நாளை காலை 10:00 மணிக்கு ஆன்லைனில் துவங்குகிறது. மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு, 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை, நாளை மறுதினம் நேரடியாக நடைபெறும்.இந்தாண்டு புதிதாக அன்னை மருத்துவக் கல்லுாரியில் 50 இடங்கள்; கன்னியாகுமரி மெடிக்கல் மிஷன் மருத்துவ ஆராய்ச்சி மருத்துவக் கல்லுாரியில் 100 இடங்கள் என, 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. நீட் தேர்வில் விலக்கு என்ற கோரிக்கை, தமிழகத்தைப் போல் பல்வேறு மாநிலங்களில் எழுந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை