உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர் அணியில் உள்ளதால் விசிக.,வுக்கு கேட்ட சின்னம் ஒதுக்க மறுப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு

எதிர் அணியில் உள்ளதால் விசிக.,வுக்கு கேட்ட சின்னம் ஒதுக்க மறுப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உளுந்தூர்பேட்டை: 'எதிர் அணியில் உள்ளதால் மதிமுக, விசிகவுக்கு கேட்ட சின்னம் ஒதுக்க மறுக்கிறார்கள்' என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டி உள்ளார்.உளுந்தூர்பேட்டையில் விசிக., தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது: ஜி.கே வாசனுக்கு மறந்தே போன சின்னம் சைக்கிள் சின்னம். அந்த சின்னம் உடனே வழங்கப்பட்டு விட்டது. ஆனால் எதிரணியில் இருப்பதால், மதிமுக மற்றும் விசிக.,வுக்கு சின்னம் இல்லை. நொண்டி சாக்கு சொல்கிறார்கள். ஆனால் நம்முடைய சின்னம் பானை சின்னம் தான். எந்த குழப்பமும் இல்லை. கடைசி நேரத்தில் சின்னம் மாறும் என்று யாரும் கருத வேண்டாம்.எவ்வளவு வெளிப்படையாக பா.ஜ., எதிர்ப்பவர்களை ஓரங்கட்டுகிற முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். விடுதலை சிறுத்தைக்கு மீண்டும் 2 தொகுதிகளை வழங்கி கூட்டணியை திமுக உறுதிப்படுத்தி உள்ளது. நமக்கு எதிர் அணியில் உள்ளவர்கள் கூட்டணியாகவே இல்லை. அதிமுக உடன் யார் சேர்ந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ravi
மார் 28, 2024 16:56

இனியும் எதிர் அணியில் இருந்தால் கட்சியும் காணாமல் போய் விடும் ???


vijai
மார் 28, 2024 13:37

டுபகூர்


saravana ramanathan
மார் 28, 2024 13:36

இவர் மற்றும் இவரது கூட்டணியில் உள்ளவர்கள் இவ்வாறு தான் பேசுவார்கள் எனத் தெரியும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மூலமாக தான் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படுகிறது என்பதை அறிய முடிகிறது. ஆமா, தேர்தல் ஆணையம் என்ன இவர்கள் எடுப்பார் கைப்பிள்ளையா? இவர்கள் வேண்டும் சின்னம் பெற முதலில் உங்கள் கட்சியை அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாற்ற முயலுங்கள். இல்லையெனில், கட்சியை கலைத்து விட்டு ஏதேனும் ஒரு கட்சியில் ஐக்கியம் ஆகுங்கள்.


தத்வமசி
மார் 28, 2024 13:33

அடங்க மறு, பானை சின்னத்தையே நீங்கள் பயன்படுத்துங்கள் அத்து மீறு அவர்கள் கொடுத்ததை பயன் படுத்த வேண்டாம் உங்களுக்குத் தான் வாக்கு வங்கி ஏராளமாயிற்றே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை