உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரிகளின் கெடுபிடியை தடுக்கவும் வணிக வரி ஆணையரிடம் கோரிக்கை

அதிகாரிகளின் கெடுபிடியை தடுக்கவும் வணிக வரி ஆணையரிடம் கோரிக்கை

சென்னை:ரோந்து வாகனங்களில் வரும் ஆய்வு அதிகாரிகளின் கெடுபிடியை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, வணிக வரித்துறை ஆணையர் ஜெகந்நாதனிடம், வணிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில், ஜி.எஸ்.டி., உள்ளிட்டவை தொடர்பாக வணிக வரித்துறை ஆணையர் ஜெகந்நாதன், முக்கிய வணிகர்கள் சங்கங்களுடன் நேற்று பேச்சு நடத்தினார்.

அபராதம் கூடாது

இதுபற்றி, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறியதாவது:ஜி.எஸ்.டி., சட்டம் அமலான முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, வணிகர்களுக்கு தெரியாமல் நடந்த தவறுகளுக்கு வட்டி, அபராதம் விதிக்கக்கூடாது என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. வணிகர்கள், உற்பத்தியாளர்கள் கணக்குகளில் ஏதேனும் குறை இருந்தாலோ, வரி விகிதத்தில் தவறு இருந்தாலோ, அலுவலகங்களில் இருந்து வணிகருக்கு மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது.பல வணிகர்களுக்கு அதை பார்க்க வசதி இல்லை. எனவே, குறை உள்ள நபர்களுக்கு ஏற்கனவே இருந்தது போல நேரடியாக நோட்டீஸ் வழங்குமாறும், மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., தகவல் தெரிவிக்குமாறும் கூறப்பட்டது.

வியாபாரம் பாதிப்பு

வணிகர்களுக்கு ஏகப்பட்ட நோட்டீஸ்கள், பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து வந்தபடி உள்ளன. இதனால், அதிலுள்ள குறைகளை கண்டுபிடித்து பதில் தாக்கல் செய்ய அதிக நேரம் செலவழிப்பதால், வியாபாரம் பாதிக்கிறது. எனவே, நோட்டீசை குறைவாக அனுப்பி விசாரணை செய்ய வேண்டும்.'இ - வே பில்'லில் சிறு தவறு ஏற்பட்டாலும், ரோந்து வாகனங்களில் வரும் ஆய்வு அதிகாரிகள், கெடுபிடி காட்டி அதிக தொகையை அபராதம் வசூலிக்கின்றனர். இதை தடுக்குமாறு வலியுறுத்தப் பட்டது. மேலும், 25 கிலோவுக்கு மேல் பாக்கெட் செய்யப்படும் அத்தியாவசிய தானியங்களுக்கு, ஜி.எஸ்.டி., விதிப்பதற்காக, எடையளவு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய உள்ளது. அதை தடுக்குமாறும் கேட்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை