| ADDED : மார் 29, 2024 12:31 AM
கோவை:சேலத்தில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியாற்றியவர் கணேசன் 78. இவரது பணிக்காலத்தில் 1993 ஜன., முதல் 2003 டிசம்பர் வரை அளவுக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கையில் கணேசன், அவரது மனைவி கனிமொழி 77, மற்றும் குடும்பத்தினர் பெயரில் வருமானத்துக்கு அதிகமாக 53 லட்சம் ரூபாய் சொத்து குவித்தது தெரிய வந்தது.இருவர் மீதும் 2003 ஆக.25ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மீது கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 20 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது.நீதிபதி மோகன ரம்யா, கணேசன், கனிமொழி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.