உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சரவணன், சீசிங் ராஜா, செந்திலுக்கு வலை; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்

சரவணன், சீசிங் ராஜா, செந்திலுக்கு வலை; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீசாரே எதிர்பார்க்காத வகையில், அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7fvxtmia&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆம்ஸ்ட்ராங் கூட்டாளி பாம் சரவணனை தீர்த்துக்கட்ட, சீசிங் ராஜா, சம்போ செந்தில் என்ற இரு ரவுடிகள் தருணம் பார்த்து வருவதால், அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம் விரைந்துள்ளனர்.

இதுகுறித்து, தனிப்படை போலீசார் கூறியதாவது:

ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்டவர், சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்த பாம் சரவணன், 41. வெடிகுண்டு வீசுவதில் இவர் கெட்டிக்காரர் என்பதால், ரவுடிகள் மற்றும் போலீசார் மத்தியில், பெயருக்கு முன்னால், 'பாம்' சேர்த்து அழைக்கப்படுகிறார்.

26 வழக்குகள்

இவர் மீது, ஆறு கொலைகள், கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், அடிதடி என, 26க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.பாம் சரவணனின் அண்ணன் தென்னரசுவை தான், பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலராக, ஆம்ஸ்ட்ராங் நியமித்தார். தொழில் போட்டி காரணமாக தென்னரசுவை, ரவுடி ஆற்காடு சுரேஷ் தீர்த்துக் கட்டினார். அதிலிருந்தே, ஆம்ஸ்ட்ராங், பாம் சரவணன் ஆகியோருக்கு, ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கோஷ்டியினர் பரம எதிரிகளாக மாறினர்.தற்போது வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சென்னை வியாசர்பாடியைrf சேர்ந்த ரவுடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங், பாம் சரவணன் ஆகியோருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். கடந்த 2018ல், வியாசர்பாடி கன்னிகாபுரம் ரயில்வே கேட் பகுதியில், நாகேந்திரனின் கூட்டாளிகளை கொலை செய்ய பதுங்கி இருந்தபோது தான், பாம் சரவணன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஜாமினில் வெளிவந்த பின், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது கொலை பட்டியலில், ரவுடிகள் சீசிங் ராஜா, சம்போ செந்தில் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிலர் உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் உடல், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த போது, பாம் சரவணனின் அண்ணன் மாரி, 48, வந்து பார்த்தார். அப்போதே மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்தளவுக்கு ஆம்ஸ்ட்ராங் மீது, பாம் சரவணன் குடும்பத்தாருக்கு விசுவாசம் உண்டு.

'ஏ பிளஸ்' ரவுடி

'ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி வாங்காமல் விடமாட்டேன்' என, பாம் சரவணன் தற்போது சபதம் எடுத்துள்ளார். கொலைக்கு பின்னணியில், வடசென்னையை சேர்ந்த ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா இருப்பதால், அவர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளார்.சம்போ செந்திலும், சீசிங் ராஜாவும் பயங்கரமான ரவுடிகள் தான். செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் ராதாகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சீசிங் ராஜா, 'ஏ பிளஸ்' பிரிவில் இடம்பெற்றுள்ள ரவுடி. இவர் மீது, கொலை, ஆள் கடத்தல் என, 33 வழக்குகள் உள்ளன. சீசிங் ராஜாவிடம் துப்பாக்கியும் உள்ளது. ஆற்காடு சுரேஷின் நிழல் போல செயல்பட்டு வந்தவர். அவரது கொலைக்கு பழி வாங்கியதில், சீசிங் ராஜாவும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கதையை முடிக்கும் பொறுப்பை, சம்போ செந்திலிடம் ஒப்படைத்துள்ளார், வேலுார் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன். அதன்படியே, ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார். இதனால், சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை தீர்த்துக்கட்ட தருணம் பார்த்து வருகிறார் பாம் சரவணன். அடுத்து ஒரு விபரீதம் நடப்பதற்குள், மூவரையும் கைது செய்ய நாங்கள் களமிறங்கி உள்ளோம்.தமிழக எல்லையோர பகுதிகள், ஆந்திராவில் தேடுதல் வேட்டை நடக்கிறது. ரவுடிகள் அவர்களின் கதைகளை முடிக்க தீவிரம் காட்டுவதும், நாங்கள் பிடிக்க முயல்வதும், சினிமாவில் வரும், 'கிளைமாக்ஸ்' காட்சி போல உள்ளது. ரவுடிகள் விரைவில் சிக்குவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மொபைல் உதிரி பாகங்களால்

தகவல்கள் கிடைக்குமா?திருவள்ளூர் மாவட்டம் கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட, ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகள் மூவரின் மொபைல் போன் உதிரி பாகங்கள், 'சைபர்' ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நேற்று மேலும் ஒரு மொபைல் போன் உதிரி பாகத்தை போலீசார் மீட்டனர். ஆய்வு முடிவில், வழக்கிற்கு முக்கியமான தகவல்கள் கிடைக்கலாம் என்று, போலீசார் எதிர்பார்க்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கைதான வழக்கறிஞர்கள் ஹரிஹரன், ஹரிதரன் ஆகியோரின் கூட்டாளிகள் மூன்று பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கைதான ஆற்காடு சுரேஷின் நெருங்கிய தோழி அஞ்சலையின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போன்கள், வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Rpalnivelu
ஜூலை 23, 2024 00:21

தமிழக போலீஸ் மிகவும் குழம்பி போயிருப்பது கண்கூடு பேசாம கலர் தலையன் சந்துருவிடம் கேச குடுத்திடுங்க. அவன் இன்னும் குழப்பி ஆர்ம்ஸ்ட்ரோங் தூக்கு போட்டு செத்துபோய்ட்டான் என்று ஒரு அறிக்கை குடுத்துடுவார்


venugopal s
ஜூலை 22, 2024 13:45

உண்மையில் இந்த விவகாரம் இரண்டு ரௌடிக் கும்பல்களின் தனிப்பட்ட பழிவாங்கும் செயல்கள். இதை அரசியலாக்கி ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயர் உண்டாக்கி அரசியல் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜகவின் கேவலமான முயற்சி இது!


Barakat Ali
ஜூலை 22, 2024 20:50

அபத்தமான கருத்து ..... தமிழகத்தில் குறிப்பாக வடசென்னை ரவுடியிசம் வளர்ந்தது கழக ஆட்சிகளில்தான் .... செல்வாக்கு உள்ளவர்களுக்கு கழகங்கள் தேர்தல்களில் சீட் கொடுத்தன ....


rajan_subramanian manian
ஜூலை 22, 2024 13:07

இந்த செய்தியின் படி ஒவ்வொரு ரௌடி பேரிலும் பத்து கொலை ,ஆள் கடத்தல்,கட்டபஞ்சயாத்து ஆகிய பல குற்றங்கள் நிலுவையில் இருக்கு. அதற்கும் மேலாக நான்கு அல்லது ஐந்து முறை குண்டர் சட்டத்தில் உள்ளே வெளியே. தண்டனை என்பது ஒரு முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்கு பின் கிடைக்கலாம். நீதி மன்றங்கள் வெறும் கெஜ்ரிவால் மற்றும் பொன்முடி, செந்தில் பாலாஜி போன்ற கேஸை மட்டும் கவனிக்கிறது. இதில் தினம் ஒரு பத்து பதினைந்து கூலிப்படை தோன்றுகிறார்கள். இதுதான் இந்த திராவிட பாரம்பர்ய அறுபது ஆண்டுகால சாதனை.


Anand
ஜூலை 22, 2024 11:06

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், மேற்படி ரவுடிகள் பற்றி காவல் துறைக்கு இதுவரை தெரியாதா? இந்த கொலைக்கு பிறகு தான் ரவுடி என்கிற ஒரு பெயரையே கேள்விப்படுகிறார்களா? அல்லது முன்பே தெரியுமா? தெரிதிருந்தும் அவர்களை ஒழித்துக் கட்டாதது ஏன்? அல்லது இதுபோன்ற சமூக விரோதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் வேலை இல்லையா? அல்லது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என காவல்துறையின் கையை கட்டிப்போடுகிறார்களா? அப்படி கட்டிப்போடுபவர்கள் யார்? ஏன்? ஒரு காலத்தில் ஸ்காட்லாண்ட் காவல்துறைக்கு ஈடாக பேசப்பட்ட நம் காவல்துறையினரின் இன்றைய நிலைக்கு யார் காரணம்?


sathiyamoorthy
ஜூலை 22, 2024 10:16

அக மொத்தம் ஜன்நாயகம் தற்பொழுது ரவுடிகளின் கைப்பிடியில் உள்ளது, அரசியல்வாதிகள், அதிகாரிகள் பத்திரிகைகள் மற்றும் நீதிமன்றம் அனைத்தும் ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெட்கக்கேடு, இந்தியா தடுமாறுகிறது.. இத்தனை குற்றம் புரிந்தவர்கள் நாட்டில் சாதாரணமாக மக்களுடன் மக்களாக வாழ முடியும் எனில் மக்களாட்சி விட மன்னராட்சி மேல்....


INDIAN
ஜூலை 22, 2024 10:12

2020 ஜூலை காரோண காலம் உத்தரபிரதேஷ் காணிபூரில் விகாஷ்துபே என்ற ரௌடி. ஒரு DSP, ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட ஒன்பது பேரை சுட்டுக்கொன்றுவிட்டு கான்பூரிலிருந்து மத்திய பிரதேசத்திற்கு சாலை மார்க்கமாக சென்று அங்குள்ள பிஜேபி நிர்வாகி வீட்டில் சுதந்திரமாக தங்கியிருந்தார், கொரோனா காலம், எங்கு செல்ல வேண்டுமானாலும் PASS வாங்க வேண்டும் அப்படிப்பட்ட காலத்தில் 9 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்று விட்டு சாலை மார்க்கமாகவே மத்திய பிரதேஷ் சென்று இருக்கிறார், யோகியின் ஆட்சியில் அவர்தான் பாஜகவின் மிக சிறந்த முதல்வர் அவருக்கே மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள். அதை ஒப்பிடும் போது தமிழகம் அமைதி பூங்கா . வடமாநிலங்களில் இரவு 9 மணிக்குமேல் தனியாக நடமாட முடியாத சூழ்நிலைதான் இன்றும்


Gopalakrishnan Balasubramanian
ஜூலை 22, 2024 11:32

சூப்பர் - வர வர, உத்தர பிரதேசம் கூட தமிழ் நாட்டை சேர்த்து பேசறீங்க அடுத்து எப்பிடி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட compare பண்ணுவீங்களா


Anand
ஜூலை 22, 2024 12:00

இந்தியன் என்கிற பெயரில் உள்ள மூர்க்கனோட கருத்து எப்படி இருக்கிறது என்றால், ஒருவர்- உன்னோட வீட்டில் பெரிய அளவில் திருட்டு நடந்திருக்கு என கூற, பதிலுக்கு இதென்ன பிரமாதம் போன மாதம் பக்கத்துக்கு வீட்டில் குண்டூசி தொலைந்து விட்டது. அதை விட இது தேவலே .......


INDIAN
ஜூலை 22, 2024 12:55

உத்தரபிரதேசத்தோடு தமிழ் அட்டை சேர்த்து தான் பேசுகிறோம், உத்தரபிரதேசம் இந்தியாவில்தான் இருக்கிறது, அதுயேன் தமிழகத்தைப்பற்றி பேசும்போது ஒட்டு போடக்கூடாது ஆட்சியை கலைக்கணும் ஆனால் உத்தரபிரதேசம் என்றால் அதேவிசயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது என்ன நியாயம், தமிழ் நாட்டிற்கு வந்து போதைப்பொருள் பற்றி பேசுவார்கள், இந்தியா முழுமைக்கும் போதைப்பொருள் அனுப்புகிற குஜராத்தை அந்த குஜராத்திலேயே பேசமறுக்கிறீர்கள்


Barakat Ali
ஜூலை 22, 2024 08:52

முக்கியமான ஒரு விஷயம்.. புலிகேசி மன்னருக்கு சாமர்த்தியம் பத்தாது.. கச்சியும் அவரு கையில இல்ல.. ஆட்சியும் அவரு கையில இல்ல.. இது மாநிலத்துக்கே நஷ்டம்.. அதைவிட மாநிலத்துக்கே ஆபத்து.. இதை உணராமல் தொடர்ந்து மன்னரின் கட்சிக்கே வாய்ப்புக்கொடுக்கும் அறிவாளிமக்கள் ....


Kanns
ஜூலை 22, 2024 08:47

Main Accused in Armstrong Murder is DMK Ally who feel Threatened by Armstrongs Growth. RulerStooge Police are Blatantly Shielding him With Biased Investigations.


spr
ஜூலை 22, 2024 08:22

காவற்துறையின் கருத்துப்படி தினமும் நாம் படிக்கும் செய்தி இவர்கள் எல்லோருமே ரவுடிகள் தொழில்முறை தகராறு முன் பகை காரணமாக ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டிருக்கின்றனர் புத்திசாலியான ஒருவர் வழக்கம் போல அரசியலில் பெரியவராகிவிட்டார் அவரும் குற்றவாளியென்றே காவற்துறையின் செய்தி மறைமுகமாகச் சொல்கிறது அப்படியிருக்க இதற்கெதற்கு இத்தனை விளம்பரம்? இவர்களால் பொதுமக்களுக்கு இந்தப் பிரச்சினையும் இல்லை காவற்துறையும் நீதிமன்றங்களும் செய்யாத பணியை அவர்கள் தாங்களே செய்து குற்றவாளிகளைக் குறைக்கிறார்கள் இப்பொழுதாவது தமிழக அரசும் காவற்துறையும் தமிழகம் குற்றவாளிகளின் கூடாரம் ஆகிவிட்டதை ஒப்புக் கொள்வார்களா? முதல்வர் யோகி போல குற்றவாளிகளைக் கட்டுக்குள் வைப்பார்களா?


UTHAMAN
ஜூலை 22, 2024 08:07

இவையெல்லாம் உண்மை என்றால் உளவுத்துறையும் சேர்ந்து களவானித்தனம் செய்துகொண்டிருந்ததா. ஏவல்துறையின் கதைகள் நம்பும்படி இல்லை. இந்த சாக்கில் திமுக.காரணை தவிர ஏனைய அனைவரையும் ஒடுக்கும் முயற்சியே இந்த கதைகள். அதற்குத் தான் என்கவுண்டர். தமிழகம் காவல் ராஜ்ஜியம் ஆகிறது. கேவலமான திராவிஷ மாடல். கடமை தவறிய காவல் அடிமைகள்.......


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை