உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாமதம் தானே தவிர நிராகரிப்பில்லை அரசு ஊழியர்களுக்கு ஆறுதல்

தாமதம் தானே தவிர நிராகரிப்பில்லை அரசு ஊழியர்களுக்கு ஆறுதல்

சென்னை:'இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் எப்போதெல்லாம், தி.மு.க., ஆட்சி அமைகிறதோ, அப்போது தான் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாழ்வில் நிம்மதி பிறக்கும். தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 53,000 ஆசிரியர்களை காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வந்தது; கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக்குழு மாற்றத்தை பலமுறை கொண்டு வந்தது எல்லாம், தி.மு.க., அரசு தான். குடும்ப நல நிதி, 3 லட்சம் ரூபாயை, தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை, அரசு ஊழியர்களால் எளிதில் எங்களிடம் வந்து சொல்ல முடிகிறது. அவற்றை படிப்படியாக நிறைவேற்றுவதிலும், இந்த அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது. சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தாமதம் தானே தவிர, அவை நிராகரிக்கப்படவில்லை. அந்த தாமதம் கூட பழனிசாமி உருவாக்கி விட்டு சென்ற நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ளது தான். கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற இயலாத நிலைமை பற்றி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களிடம் ஒளிவு மறைவின்றி விளக்கி சொல்லும் ஒரே அரசு தி.மு.க., அரசு தான்.மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன், தமிழகத்தின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை