உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரி மீது அரசு பஸ் மோதல்; மாணவியர் இருவர் காயம்

லாரி மீது அரசு பஸ் மோதல்; மாணவியர் இருவர் காயம்

திண்டுக்கல்;திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து வேலசேர்வைக்காரன் பட்டிக்கு அரசு பஸ் ஒன்று மாலை பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜோசப்,ஓட்டினார். பழநிரோடு முருகபவனம் அருகே வந்தபோது திடீரென ரோட்டோரத்தில் நின்ற லாரி குறுக்கே வந்தது. அப்போது அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பள்ளி மாணவிகள் காயமடைந்தனர். அரசு பஸ்சின் முன்பகுதி முழுவதும் சேதமானது. தகவலறிந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய அரசு பஸ்சை மீட்டு போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ