உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை

பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முதல்கட்ட லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடைபெற உள்ள நிலையில், இதற்கான பிரசாரம் நாளை (ஏப்.,17) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அதன்பிறகு சமூக வலைதளங்களில் பிரசாரம் பகிர்ந்தாலும், ஓட்டு சேகரித்தாலும் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சியினர் வேட்பாளர்களுக்கு ஓட்டு சேகரிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இளைஞர்களிடம் ஓட்டு சேகரிக்கும் வகையில், அவர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் மூலம், தேர்தல் பிரசாரம் செய்வது அதிகரித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uby3rfnr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன் மூலம் குறிப்பிட்ட தகவல்கள் அதிகப்படியான நபர்களுக்கு சென்று சேர்வதுடன், செலவுகளும் குறைவு; இந்த வகை பிரசாரத்திற்கு கட்டுப்பாடுகளும் இல்லை. எனவே அந்தந்த கட்சிகள் தங்களின் தொழில்நுட்ப அணியின் உதவியுடன் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.இதற்கிடையே நாளை (ஏப்.,17) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. அதன்பிறகு கட்சிகள் பிரசாரம் செய்யக்கூடாது என்பது விதி. இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு சமூக வலைதளங்களில் ஓட்டு சேகரித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நாளை மாலை 6 மணி வரை மட்டுமே ஓட்டு சேகரிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கு மேல் பிரசாரத்தை பகிர்ந்தாலும், ஓட்டு சேகரித்தாலும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1284 கோடி பறிமுதல்

அதேபோல், நாளை 6 மணிக்கு பிறகு தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியான அறிக்கையில், 'தமிழகத்தில் இதுவரை ரூ.1284 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் ரொக்கம் ரூ.162.47 கோடி (வருமான வரித்துறையால் ரூ.83.63 கோடியும், பறக்கும் படையால் ரூ.78.84 கோடி) பறிமுதல் செய்யப்பட்டது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Thirunavukkarasu Sivasubramaniam
ஏப் 16, 2024 16:46

பிரச்சாரம் ஓய்ந்த பிறகு பணம் பட்டுவாடா செய்தால் நடவடிக்கை ஏதும் இல்லை


Lion Drsekar
ஏப் 16, 2024 15:08

வீடு வீடாக என்று பணம் கொடுக்க மட்டுமே ? வந்தே மாதரம்


ஆரூர் ரங்
ஏப் 16, 2024 14:50

மற்ற பெரும்பாலான மாநிலங்களில் இன்னும் தேர்தல் பிரச்சாரம் நடக்கிறதே. அங்கு தேசீயக் கட்சிகள் சமூக வலைத்தளங்களில்( முக்கியமாக யூ ட்யூப் , X, INSTAGRAM) மூலம் தங்கள் கட்சி சின்னத்துக்கு வாக்களிக்க கேட்டுக் கொள்வது இங்கும் எட்டும். தடுக்கவே முடியாது.


Kasimani Baskaran
ஏப் 16, 2024 14:22

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த எத்தனையோ பேர் முயன்றார்கள் ஒருவரும் ஜெயிக்கவில்லை வேண்டுமானால் சமூகவலைதங்களை கட்டுப்படுத்துவதற்கு பதில் இணையத்தயே நிறுத்தலாம்


Balamurugan
ஏப் 16, 2024 13:27

பிரச்சாரம் நேரம் முடிந்தவுடன் பணம் கொடுக்கலாமா? தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் இவர்களால் ஒன்னும் செய்ய முடியாது சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்வதை தடுக்க கூடாது வேண்டுமானால் வேட்ப்பாளர் பிரச்சாரம் செய்யாமல் இருக்க சொல்லலாம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை