உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அபாண்டமாக பேசிய அதிமுக மாஜி நிர்வாகிக்கு நடிகை திரிஷா நோட்டீஸ்: மன்னிப்பு கேள் இல்லையெனில் நடவடிக்கை பாயும்

அபாண்டமாக பேசிய அதிமுக மாஜி நிர்வாகிக்கு நடிகை திரிஷா நோட்டீஸ்: மன்னிப்பு கேள் இல்லையெனில் நடவடிக்கை பாயும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு நடிகை திரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், '24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.2017ம் ஆண்டில் அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்ட போது அக்கட்சியின் எம்எல்ஏ.,க்கள் அணி மாறாமல் இருக்க கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி ஏ.வி.ராஜூ என்பவர் ஒரு வீடியோவில் பேசி இருந்தார். அதில் நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் குறித்து அவதூறாக பேசியிருந்தார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் கருணாஸ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்னை பற்றியும், திரிஷா பற்றியும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்ட ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். நடிகை திரிஷாவும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன் எனத் தெரிவித்திருந்தார்.இந்தச்சூழலில் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் திரிஷா. அதில், ‛‛தன்னை பற்றி அவதூறாக பேசிய அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 24 மணி நேரத்தில் பொது வெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பத்திரிக்கை, ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் மூலம் வீடியோ வெளியிட வேண்டும். மேலும் ஏற்கனவே வெளியான அவதூறு வீடியோக்களை அனைத்து தளங்களில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக இந்த வீடியோ பற்றி விளக்கம் அளித்த ராஜூ, ‛‛நடிகை த்ரிஷா குறித்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது. நான், திரிஷா குறித்து பேச, அவ்வளவு பெரிய ஆள் இல்லை. திரிஷாவை நான் சொல்லவில்லை. திரிஷா உள்ளிட்ட சினிமா துறையினரிடம் மன்னிப்பு கோருகிறேன்'' எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

g.s,rajan
பிப் 22, 2024 19:40

நல்ல துணிச்சலான நடிகை தான் ,திறமையான நடிகையும் கூட ...சர்ச் பார்க் கான்வென்ட்டில் படித்தவர், என்ன செய்வது...???சினிமாவில் நுழைந்து விட்டால் பணமும் , புகழும் கிடைக்கும் ஆனால் பிரச்சனைதான்...


சிவ குரு நாதன் தஞ்சாவூர்
பிப் 22, 2024 19:35

வருஷம் தோறும் ~ பொங்கல் திருவிழா போது ~ எங்கள் ஊரில் ~ நாடகம் போடுவார்கள் ~ வழக்கமாக திரிஷா என்ற பெயரில் ~ ஒரு இளம் நடிகை ~அந்த நாடகத்தில் நடிப்பார் ~ ராஜு ~ அந்த திரிஷாவை சொல்லி இருப்பார் ~


நல்லவன்
பிப் 22, 2024 19:15

ஜோசப்போடு ஆட்டம் போட்டவங்க, ஒருவேளை அவருக்கு வாய்ப்பு கிடைச்சுட்டா - உங்க நிலைமை என்னவுமோ - மன்னிப்பு கேட்டுவையுங்கள்..


kulandai kannan
பிப் 22, 2024 18:57

மான நஷ்டம் எவ்வளவு? 25 லட்சம்!!


N.Purushothaman
பிப் 22, 2024 18:07

இந்த நடிகை மீது ஏன் இவ்வளவு வன்மம் பரப்பப்படுகிறது ...ஆனால் ஒன்று ...தற்கால நடிகைகளில் இவர் அளவிற்கு வேறு எவரும் எதிர்மறை மற்றும் அவதூறு கருத்துக்களை எதிர்கொண்டதில்லை ..


ராமகிருஷ்ணன்
பிப் 22, 2024 17:44

அதெல்லாம் அசரமாட்டார்கள். கோர்ட்டில் வேற திரிஷா என்று சொல்வாங்க. அண்ணன் தொரைமுருகனாரு வழி காண்பித்து விட்டார்


Muralidharan S
பிப் 22, 2024 17:37

எது நிஜம், எது பொய் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.. சம்பந்தப்பட்டவர்கள் நேரிடையாக வழக்கு தொடரலாம்... ஆனால், ஒன்று....எப்பேர்ப்பட்ட பெரிய பெரிய மனிதர்களும் / கண்ணியம் மிக்க தலைவர்களும் இருந்த தமிழ்நாடு, இன்றைய அரசியல் கூவத்தை விட அதிகமாக நாறிக்கொண்டு இருக்கிறது. தமிழன் என்று சொல்ல அசிங்கப்படுடா. தலை குனிந்து தொங்குடா என்ற நிலையில் இருக்கிறது...


g.s,rajan
பிப் 22, 2024 17:33

உண்மை ஆக்கிட்டாங்க .....


Velan Iyengaar
பிப் 22, 2024 17:20

புத்திபலம் கூட இருப்பதினால் இவர் மிக சாமர்த்தியமாக இந்த விஷயத்தை எதிர்கொள்வார் தலைக்கு மேலே போவதால் ஜான் போனா என்ன முழம் போனா என்ன??


குமாரவேல் பெருந்துறை
பிப் 22, 2024 17:03

மூன்று எழுத்து நடிகை நிறைய பேர் உள்ளனர் ~ இவருக்கு எதுக்கு கோவம் வருகிறது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை