மேலும் செய்திகள்
எய்ட்ஸ் சங்க ஊழியர்கள் ஜன.4ல் உண்ணாவிரதம்
2 hour(s) ago
பதிவுத்துறையில் டிச., 15ல் கூடுதல் டோக்கன்
2 hour(s) ago
சென்னை:'வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பஸ் நிலையம் அருகே, மணல் மற்றும் மண் கொள்ளையை கண்டித்து வரும் 22ம் தேதி அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என அக்கட்சி பொதுச செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் அராஜகங்கள், வன்முறை சம்பவங்கள், சட்ட விரோத செயல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, தொடர் கதையாக உள்ளது.வேலுார் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தி.மு.க.,வை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளால், மணல், மண் கொள்ளை அமோகமாக நடந்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருகிறது என, அ.தி.மு.க., தரப்பில் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.அவர்கள் ஆட்சியாளர்களுக்கு பயந்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் காத்து வருகின்றனர். அதேபோல், இந்த ஒன்றியத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு, போதிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால், மலைவாழ் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், அணைக்கட்டு பஸ் நிலையம் அருகே, வரும் 22ம் தேதி காலை 10:00 மணிக்கு, கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago