| ADDED : மார் 20, 2024 11:51 PM
காஞ்சிபுரம், காஞ்சி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வட மாநிலங்களில் இரண்டு ஆண்டுகள் யாத்திரை சென்று, நேற்று சங்கர மடம் வந்தார்.காஞ்சிபுரம் காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 2022ம் ஆண்டு, மார்ச் மாதம் விஜய யாத்திரை புறப்பட்டு, ராமேஸ்வரம், ஆந்திரா, தெலங்கானா, காசி, உத்திரபிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.அயோத்தி ராம ஜென்ம பூமி கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்றார். ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் ஜோதிர்லிங்க க்ஷேத்திரமான மல்லிகார்ச்சுன சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார். திருப்பதியில் சந்திரமவுலீஸ்வர பூஜை செய்து வந்தார்.இரண்டு ஆண்டுகளுக்கு பின், நேற்று இரவு 7:10 மணிக்கு காஞ்சிபுரம் வந்தார்.காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் அருகில், காஞ்சி சங்கரமடம் நகர வரவேற்பு கமிட்டி, விஷ்வ ஹிந்து பரிஷத், நகரவாசிகள், பல்வேறு திருக்கோவில் நிர்வாகம் சார்பில், சங்கர விஜயேந்திர சுவாமிகளுக்கு வரவேற்பு விழா நடந்தது.சங்கரமடம் செல்லும் வழிநெடுகிலும் காத்திருந்த பக்தர்களுக்கு, சுவாமிகள், பிரசாதங்கள் வழங்கினார்.