உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களுக்கு ஓகேனா எங்களுக்கும் ஓகே: தலித்தை முதல்வராக்க அன்புமணி விதித்த நிபந்தனை

உங்களுக்கு ஓகேனா எங்களுக்கும் ஓகே: தலித்தை முதல்வராக்க அன்புமணி விதித்த நிபந்தனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை முதல்வர் ஆக்குவோம்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீபத்தில், ''எந்த சூழலிலும், எந்த காலத்திலும் ஒரு தலித், ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது'' எனப் பேசியிருந்தார். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறியதாவது: ஒட்டுமொத்த பட்டியலின சமூகத்தினர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால், தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=foid1xf0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது வெறும்பேச்சு அல்ல. எங்களுக்கு முதன்முதலில் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தவுடன் பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவருக்குதான் அந்த பதவியைக் கொடுத்தோம். பட்டியலின மக்களுக்கு அதிகமாக செய்தது பாமக தான். நாங்கள் 1998ல் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவரை மத்திய அமைச்சராக்கினோம். ஆனால் திமுக 1999ல் தான் ஆ.ராசாவை மத்திய அமைச்சராக்கியது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ramar P P
ஆக 17, 2024 00:32

திருமாவளவனுக்கு முதல்வராக ஆசை.ஆகவே இந்த கருத்தை கூறியுள்ளார்.


Ramar P P
ஆக 17, 2024 00:28

எந்த சாதியானாலும் நல்லவர்கள் திறமையானவர்கள் முதல்வராகட்டும்


Alagu Durai
ஆக 16, 2024 16:35

உங்களை எவரும் நம்பமாட்டார்கள். உன் கட்சியில் மந்திரியாக இருந்த தலித் எழில் மலை, பொன்னுச்சாமி ஆகியோர் பட்ட ஆழமாக போதாதா? பொன்னுச்சாமி சைரன் வைத்த கார், மந்திரி பங்களா மட்டுமே அனுபவித்தார். அந்த பேட்ரௌலியத்துறை பவர் முழுக்க அனுபவித்தவர் அம்புமனி. எழில் மலை துறையில் தலையிட்டு அவரை செயல்படாமல் கொடுத்த டார்ச்சர் அப்பாவி மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். எங்களை போன்றவர்களுக்கு தெரியும். குமாரபாளையம் பொதுக்கூட்டத்தில் மேடைக்கு பின்னால் நின்று கொண்டு பொன்னுச்சாமி யை உங்கள் ஆட்கள் அவமானப்படுத்தி கதை மறக்க முடியுமா?. பெட்ரோலிய துறை மந்திரி யாக இருந்தும் அடுத்து வந்த தேர்தலில் செலவுக்கு பயமில்லாமல் உனா விட்டு வாசலில் மூன்று நாட்கள் பொன்னுச்சாமி காத்துக்கிடந்தாரே. மறக்க முடியுமா? டெல்லியில் ஓட்டல் மவுரிய ஷேராட்டனில் தங்கி ஆக்டிங் மந்திரியாக செயல்பட்டது நீ தானே. பைல் பார்த்து பென்சிலால் டிக் ஆடித்தது நீ தானே. மவுரியா ஷேராட்டன் ஓட்டலில் அப்போதே ஒரு நாள் வாடகை பத்தாயிரம். ஊன் சகவாசம் வேண்டாம் என்று கட்சியை விட்டு எழில் மலை ஏன் வெளியேறினார் என்ற கதையை நான் சொல்லவா நீயும் உன் அம்மனும் கொடுத்த டார்ச்சர். அவமதிப்பு. வன்னிய பேரின மக்கள் உன்னை நம்பலாம். காட்டி கொடுக்கும் தலித் தில் விரல்விட்டு எண்ணக்கூடிய வர்கள் உன்னை நம்பலாம். உன்னை யும் உன் அம்மனையும் ஒரு போதும் நம்ப மாட்டோம். உன்னிடம் பொன்னுச்சாமி மந்திரி யாக இருந்த காலத்தில் பெட்ரோல் பங்குக்காக கால் கடுக்க நின்றவர் நான். உன்னைப் பற்றி எழுத இந்த தளம் போதாது. பல வால்யூம் கொண்ட புத்தகம் போடலாம். அவ்வளவு கதைகள் என்னிடம் உள்ளது. கதை அல்ல அவ்வளவும் உண்மை வரலாறு. நடந்தவை. இதை எழுத வாய்ப்பளித்தமைக்கு நன்றி மக்களே


Sathish Kumar
ஆக 16, 2024 19:52

திரித்து பேசுவதே திராவிட மாடல் மற்றும் கோபாலபுரம் கொத்தடிமைகள் வேலை


Swaminathan L
ஆக 16, 2024 12:23

எது எப்படியோ? தமிழகத்திற்கு துணை முதலமைச்சர் இன்னும் கொஞ்ச காலத்திற்கு இல்லை என்று ஆகி விட்டது.


சந்திரன்
ஆக 16, 2024 08:33

நீங்க அமைச்சர் பதவி தந்தீங்க அவன் அதிமுகவில் போய் இணைந்தான் மனமும் குணமும் மாறாது.


manivannan
ஆக 16, 2024 08:12

அரசியலில் எங்கே யாரிடம் நேர்மை உள்ளது. அதற்கான விளக்கத்தை கவனமாக கூறுங்கள்.


Ramasamy Cpm
ஆக 16, 2024 06:14

வாரிசு அரசியல் செய்தால் நடுமுச்சந்தியில் வைத்து சாட்டையால் அடியுங்கள்.. என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு..? .. காற்றோடு போயாச்சு..


theruvasagan
ஆக 15, 2024 23:32

எந்த சூழ்நிலையிலும் எந்த காலத்திலும் ஒருத்தர் மட்டும் முதலமைச்சர் ஆகவே முடியாது. அறிவாலயத்துக்கு அடிமை என்று சாசனம் எழுதிக் கொடுத்தவிட்ட பிறகு முதல்வர் நாற்காலிக்கெல்லாம் ஆசைப்படலாமா. வழக்கமாக போடுகிற உடைந்தபோன பிளாஸ்டிக் நாற்காலி கிடைத்தாலே பெரிய விஷயம்.


Venkatachalapathy
ஆக 15, 2024 22:34

சாதி அரசியல் செய்பவர்கள் அனைவரையும் கேளுங்கள்,அவரவர் உடலில் சாதி எந்த இடத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று.


Skn
ஆக 15, 2024 20:27

Better to fix surname/ e name as everyone is interested for e based census and e based leaders . Other states follow. Why not we


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை