உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  டிச., 8ல் காவிரி ஆணைய கூட்ட ம் மேகதாது அணை குறித்து விவாதம்

 டிச., 8ல் காவிரி ஆணைய கூட்ட ம் மேகதாது அணை குறித்து விவாதம்

சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், டிசம்பர், 8ம் தேதி டில்லியில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.2 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். இதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆணையம் அவ்வப்போது கூடி, முறைப்படி நீர் திறக்க உத்தரவிட்டு வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட, கர்நாடக அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதற்கான திட்ட அறிக்கை, காவிரி மேலாண்மை ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதி வழங்காமல் தடுக்க, தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 'மேகதாது அணை தொடர்பான கருத்துகளை, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தெரிவிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம், டில்லியில் டிச.,8ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் மேகதாது அணை குறித்து, காரசார விவாதம் நடக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை