உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிமி அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

சிமி அமைப்புக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கான (சிமி) தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.'சிமி' எனப்படும், இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு, 1977ல் துவங்கப்பட்டது. இந்த அமைப்பு, பல்வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டதை அடுத்து, 2001ல், மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.அப்போது முதலே, இந்த அமைப்பு மீதான தடை, அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடைசியாக, 2014ல், ஐந்தாண்டு தடை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த தடை உத்தரவு, நாளை மறுநாளுடன் (ஜனவரி 31) முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் சிமி அமைப்புக்கான தடையை மேலும் 5 நாட்களுக்கு நீட்டித்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளாத பிரதமர் மோடியின் நோக்கத்தை வலுப்படுத்தும் விதமாக 'இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு (சிமி)' சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு 'சட்டவிரோத அமைப்பாக' அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதத்தின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும் சிமி ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rajagopal
ஜன 29, 2024 21:47

தேசத்திற்கு எதிராகவும், எந்த ஒரு மதத்தினரையும் ஏமாற்றி தங்களது மதத்திற்கு மாற்ற முயலும் இயக்கங்களும், ஒரு குறிப்பிட்ட சாதியினரையோ, மதத்தினரையோ குறி வைத்து அவர்களை அழிக்கும் முயற்சியில் இயங்கும் சித்தாந்தங்களோ, கட்சிகளும், பிரிவினை வாதத்தை முன்னெடுக்கும் இயக்கங்களும், நமது நாட்டின் எதிரி நாடுகளை ஆதரிக்கவோ, அவற்றிற்காக செயல்படும் இயக்கங்களும் நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும். அவை மீண்டும் இன்னொரு பெயரில் முளைத்தாலும் அவற்றையும் உடனே தடை செய்ய வேண்டும். அவற்றை சார்ந்த பத்திரிகைகளும், ஊடகங்களும், சொத்துக்களும், பணமும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் நமது கலாச்சாரத்தையும், தேசத்தையும் கூடிய சீக்கிரத்தில் அழித்து விடுவார்கள்.


ஆரூர் ரங்
ஜன 29, 2024 20:38

திமுக சின்னத்தில் எம்எல்ஏ ஆகியுள்ள ஜவாஹிருல்லா இதன் தானைத் தலைவராக இருந்தாராம். ஆச்சர்யமில்லைதானே?


Duruvesan
ஜன 29, 2024 20:26

இண்டி கூட்டணி,எடப்பாடி சோகம் ????


Shankar
ஜன 29, 2024 19:42

ஐந்து நாட்களுக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஐந்து வருடங்களுக்கு என்று திருத்தி படிக்கவும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 29, 2024 19:34

வேறு வேறு பெயர்களில் ஜிஹாத் த்தை தொடருவார்கள் .....


மேலும் செய்திகள்







புதிய வீடியோ