மேலும் செய்திகள்
தெரு நாய்கள் அல்ல.... சமூக நாய்கள்....
10 minutes ago
செங்கோட்டையன் கருத்துக்கு மதுரையில் பழனிசாமி பதில்
49 minutes ago
தேனி: தமிழகம் முழுவதும் காங்கிரசில் அமைப்பு சீரமைப்பு இயக்கம் நடத்தி மாவட்ட தலைவர் உட்பட நிர்வாகிகள் மாற்றம் செய்ய உள்ளதாக தேனியில் அக்கட்சியின் மாவட்ட மேலிட பொறுப்பாளர் அகமத்துல்லா குசைனி தெரிவித்தார்.தேனி பழனிசெட்டிபட்டியில் காங்., ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நிருபர்களிடம் மேலிட பொறுப்பாளர் அகமத்துல்லா குசைனி கூறியதாவது: ராகுல் அறிவுறுத்தலில் மாவட்டந்தோறும் காங்., சார்பில் அமைப்பு சீரமைப்பு இயக்கம் நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசித்துள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாற்றம் செய்வது குறித்து கருத்து கேட்டு வருகிறோம். அனைவருக்கும் விண்ணப்பம் வழங்கி பரிசீலிக்கப்பட்டு மாவட்டத்திற்கு 10 பேர் தேர்வு செய்து அதனை அகில இந்திய தலைமைக்கு அனுப்ப உள்ளோம். இப்பணியை டிச., 5க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். சிபாரிசு, பரிந்துரைக்கு இடமின்றி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். மாவட்டத்தில் 4 நாட்கள் தங்கி அனைத்து தொகுதிக்கும் செல்ல உள்ளேன். அங்குள்ள மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனைகள், கருத்துக்கள் கேட்க உள்ளேன். அனைத்து மாவட்டங்களிலும் இந்த பணி நடக்கிறது என்றார்.
10 minutes ago
49 minutes ago