உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கட்டுக்குள் உள்ளது கொரோனா

கட்டுக்குள் உள்ளது கொரோனா

தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்க துவங்கி, ஒன்றரை மாதங்களில், 702 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது அது கட்டுக்குள் வந்திருப்பதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஜே.என்.1.1 வகை கொரோனா பரவ துவங்கியதால், தினமும், 40 பேர் வரை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. அந்த வகையில், ஒன்றரை மாதங்களில் 702 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஐந்து பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில், ஜே.என்.1.1 வகை கொரோனா பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் கட்டுக்குள் வந்திருப்பதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து, அத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்தியாவில் கேரளா போன்ற மாநிலங்களிலும், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் ஜே.என்.1.1 வகை கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வந்தனர். தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்ததால், பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தாமல், கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. அதேநேரம், மற்ற காய்ச்சல்கள் போல், கொரோனாவும் அவ்வப்போது உருமாறி பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை