உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற திமுக அரசு: இ.பி.எஸ்., சாடல்

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற திமுக அரசு: இ.பி.எஸ்., சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற விடியா திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்' என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று திமுக முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uo4mgdnc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Godyes
ஜூலை 13, 2024 07:36

ஒரு பத்து பேருக்கு முகத்தில் இவன் குடிப்பவன்னு பச்ச குத்தினா போதும் மது விலக்கு ஆட்டோமேட்டிக்கா அமலுக்கு வந்து விடும்.


Narayanan Muthu
ஜூலை 10, 2024 20:13

சீசனுக்கு சீசன் வரும் அரசியல்வாதி. கோமாவுல இருந்து எழுந்து எதையாவது சொல்லிவிட்டு பின்னர் கோமாவுக்கே சென்றுவிடும் வினோத நோயாளி


காளிதாஸ்,பரமக்குடி
ஜூலை 10, 2024 19:25

கோடநாடு கொலை குற்றவாளிகள் யாரென.தெரிந்தும் அவர்கள் மீது இன்னும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் வெளியே உலவ விட்டு வேடிக்கை பார்க்கும் திறனற்ற திமுக விடியா அரசு என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி சேர்த்து சொல்லியிருக்க வேண்டும்


பேசும் தமிழன்
ஜூலை 10, 2024 18:12

பார்த்து..... பங்காளி கட்சிக்கு வலிக்காமல்..... இல்லை என்றால் கொடநாடு பூதம் கிளம்பி விட போகிறது.


Ms Mahadevan Mahadevan
ஜூலை 10, 2024 17:33

முதல்வர் ஸ்டாலின் உறு தியான சரியான முடிவெடுப்பதில் தினருகிரார். துணிந்து நல்ல பலன் கிடைக்கும் முடிவுகளை எடுக்க வேண்டும்


R S BALA
ஜூலை 10, 2024 17:16

நீங்க முதலில் நிறுத்துங்கள்.. நெதமும் ஏதாச்சும் கூவறதே வேலையாப்போச்சு..


T.sthivinayagam
ஜூலை 10, 2024 16:58

என்ன செய்வது நீங்கள் பத்து ஆண்டுகள் உருவாக்கிய கட்டமைப்பை மாற்ற திமுக


மேலும் செய்திகள்









புதிய வீடியோ