உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வினரை நிலை குலையச் செய்யும் முயற்சி பகல் கனவாகும்: கருணாநிதி

தி.மு.க.,வினரை நிலை குலையச் செய்யும் முயற்சி பகல் கனவாகும்: கருணாநிதி

சென்னை: 'போலீசார் துணை கொண்டு, நில அபகரிப்பு வழக்குகள் மூலம் தி.மு.க.,வினரை நிலை குலையச் செய்யலாம் என்ற அ.தி.மு.க., முயற்சி பகல் கனவாகும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க., அரசு நில அபகரிப்புக்கு ஊக்கமும், முன்னுரிமையும் அளித்து வருகிறது. இதனால், விரும்பத்தகாத பல விளைவுகள் ஏற்படும். பெரும்பாலான நிலப் பிரச்னைகள் சிவில் வழக்குகள் என்பதால், போலீசார் அதில் அதிகம் ஆர்வம் காட்டுவர். அதனால், ஆட்சியாளர்கள் நினைத்தாலும், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கட்டப் பஞ்சாயத்துகள் முளைக்கும். பொருள் சேரும் இந்த வழக்குகளால், பொய் புகார்கள் புற்றீசல் போல் முளைக்கும். மேலும், உள்நோக்கம் மற்றும் பல காரணங்களுக்காக, நில அபகரிப்பு வழக்கில் போலீசார் ஆர்வம் காட்டினால், கொலை, கொள்ளை மற்றும் குற்றங்கள் அதிகரித்து, பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக் குறியாகிடும். நில அபகரிப்பு பிரச்னைகளை அலட்சியப்படுத்த வேண்டும் என்பதற்காக, இதை கூறவில்லை. நில அபகரிப்பு புகாரில், தி.மு.க.,வை மட்டும் குறி வைக்காமல், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களைப் புலனாய்வு செய்வது போல், தீவிரமாக விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் துணையோடு, நில அபகரிப்பு வழக்குகள் மூலம் தி.மு.க.,வினரை பழி வாங்கும் அ.தி.மு.க.,வின் முயற்சி பகல் கனவாகும். நிறைவேறாததை நினைத்து நெஞ்சை புண்ணாக்கி கொள்ளாமல், தமிழகத்தின் அடிப்படை பிரச்னைகளை சிந்தித்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை