உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ‛‛வலுத்திருக்கு, பழுக்கவில்லை: ஸ்டாலின் போட்ட புதிர்: எதற்கு சொன்னார் தெரியுமா?

‛‛வலுத்திருக்கு, பழுக்கவில்லை: ஸ்டாலின் போட்ட புதிர்: எதற்கு சொன்னார் தெரியுமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனை தி.மு.க., உறுதிபடுத்தவில்லை. ஜூலை 20 ல் தி.மு.க., இளைஞரணி கூட்டத்தில் இது குறித்து உதயநிதி பேசும்போது, துணை முதல்வர் பதவி குறித்து பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது. எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் என்றார்.இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினிடம், ‛‛உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறதே ''என நிருபர்கள் எழுப்பினர். ஸ்டாலின் அளித்த பதில்: வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை எனக்கூறினார்.மேலும், சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

karutthu
ஆக 12, 2024 16:21

அப்போ வருகிற 21-08-2024 அன்று பழுத்துவிடுமோ


Natarajan Ramanathan
ஆக 11, 2024 23:13

அது எந்த ஜென்மத்திலும் பழுக்காது..... பிஞ்சிலேயே வெம்பி விட்டது....


Matt P
ஆக 08, 2024 12:40

பழுத்துட்டுன்னா பழத்தின் கதை முடியும் நேரம் என்று தான் பொருள். வலுத்திருக்கு என்றால் இது தான் நேரம். பழுத்திருக்கும் ஸ்டாலின் விளையாடியது போதும் என்று ஒதுங்கலாம். இல்லாவிட்டால் ஜ்ஞான பழம் துர முருகனுக்கும் வாய்ப்பு கொடுக்கலாம் பழம் அழுகும் முன்பே


மு. செந்தமிழன்
ஆக 07, 2024 06:30

அப்படியே வெங்கல கடையில் மன்னர் ஆட்சியில் மகுடம் சூடும் கிரீடத்திற்கு ஆர்டர் கொடுத்து உதயநிதி தலையில் மாட்டவும்.


venugopal s
ஆக 05, 2024 21:49

உதயநிதிக்கு உதவி முதல்வராக தகுதி இல்லை என்று இங்கு வாய் கிழியப் பேசுபவர்கள் ஒரு வார்ட் கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாதவராக அடுத்த தமிழக முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுவதில் என்ன நியாயம் உள்ளது?


krishna
ஆக 05, 2024 22:15

AAHA GOPALAPURAM KOTHADIMAI


hari
ஆக 06, 2024 06:35

வேணு.... உங்க லெவெலுக்கு நீங்க இன்பநிதிக்கே முட்டு தூக்கலாம்...


மு. செந்தமிழன்
ஆக 07, 2024 06:26

அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி தனது வாக்குரிமையை விற்கும் தமிழ்நாட்டில் உதயநிதி என்ன அவரது பேரன் கூட தமிழக உதல்வர் ஆக முடியும். திமுக விற்கு வாக்களிக்கவில்லை என்றால் மகளிர் உதவி தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்காது என அப்பாவி மக்களை மிரட்டியே பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றீர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்


Matt P
ஆக 08, 2024 21:11

முதல்வராயிருக்கும் தகுதி சிந்தித்து பேசும் சிந்தித்து யாருக்கும் பாதகம் இல்லாமல் செயல்படும் எல்லோருக்கும் இருக்கிறது .படிச்சிருக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை.காமராஜர் மக்களின் தேவைகளை இரக்க மனதோடு சிந்தித்து செயலாற்றியிருக்கிறார்


Bala
ஆக 05, 2024 20:40

தமிழில் காய் பழுக்கவில்லை என்றால் பிஞ்சில் முத்திவிட்டது உதவாது, அது என்ன வலுத்திருக்கு தெலுங்கா ?


Matt P
ஆக 08, 2024 21:04

வலுத்திருக்கு என்றால் வலுவா strong என்று பொருள்.


kulandai kannan
ஆக 05, 2024 20:03

பிஞ்சிலேயே பழுத்தவர்கள்தானே.


முருகன்
ஆக 05, 2024 19:16

இயற்கையை யாராலும் கணிக்க முடியாது


kuppusamy India
ஆக 05, 2024 18:26

புரியுதா மக்களே...!


வாய்மையே வெல்லும்
ஆக 05, 2024 18:06

ஒரு விஷயமும் அரசியல் அறிவும் இல்லாத ஒருவருக்கு விளையாட்டு துறையில் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தபின் குறுக்கு சந்தில் புகுந்து பல படிக்கட்டுகளை தாண்டி துணை முதலமைச்சர் பதவி .... கோமாளி மாடல் ஆட்சியில் பெற்றபிள்ளைக்கே கொடுத்து அழகு பார்த்து நடப்பது எதிர்பார்த்த ஒன்று. இதை பார்த்து மக்கள் கைகொட்டி சிரிப்பார்கள்... ஊரார் சிரிப்பார்கள்.. உங்களுக்கு என்ன வந்தது துடைத்து விட்டு உங்களின் துதியை நீங்களே மெச்சி பேசிக்குவீங்க. வெட்கக்கேடு


மேலும் செய்திகள்