உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டூவீலர் மீது அரசு பஸ் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது அரசு பஸ் மோதி ஒருவர் பலி

விருதுநகர் : விருதுநகர் -- மதுரை நான்கு வழிச்சாலை புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பை கடக்க முயன்ற டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் பெரியபேராலியைச் சேர்ந்த அர்ஜூனன் 47, பலியானார். மற்றொருவர் காயமுற்றார்.விருதுநகர் அருகே பெரிய பேராலியைச் சேர்ந்தவர்கள் முத்து 37, அர்ஜூனன். அர்ஜூனன் 10 ஆண்டுகளாக மதுரையில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் டூவீலரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மதுரை நான்கு வழிச்சாலையில் புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பில் விருதுநகருக்குள் செல்ல ரோட்டை டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) கடக்க முயன்றனர். அப்போது - மதுரை கூடல்புதுாரைச் சேர்ந்த சம்சுதீன் 43, ஓட்டிய நாகர்கோவில் செல்லும் அரசு பஸ் மோதியதில் இருவரும் 20 மீட்டர் துாரத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். அர்ஜூனன் சம்பவயிடத்தில் பலியானார். டூவீலரை ஓட்டிய முத்து தலையில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை