உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளுக்கு தொல்லை; போக்சோவில் தந்தை கைது

மகளுக்கு தொல்லை; போக்சோவில் தந்தை கைது

ஆரணி : சென்னை, அமைந்தகரையை சேர்ந்த, 42 வயது டிரைவர், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு மகள் உள்ளார். கருத்து வேறுபாடால், 17 வயது மகளுடன், ஆரணி அரு‍கேயுள்ள ஒரு கிராமத்தில் வாடகை வீட்டில் தாய் வசிக்கிறார். கணவரும் அதே பகுதியில் தனியாக வாடகை வீட்டில் வசிக்கிறார். அவ்வப்போது மகளை பார்க்க, மனைவி வீட்டிற்கு சென்று வந்தார். மனைவி இல்லாத நேரத்தில் மகளை பார்க்க சென்ற அவர், பெற்ற மகளுக்கு அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்த தாய் புகார்படி, ஆரணி அனைத்து மகளிர் போலீசார் நேற்று, சிறுமியின் தந்தையை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை