உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்ட விரோத பண பரிமாற்ற புகார்: சென்னையில் பல இடங்களில் ரெய்டு

சட்ட விரோத பண பரிமாற்ற புகார்: சென்னையில் பல இடங்களில் ரெய்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து, சென்னையில் உள்ள ஒரு நிறுவனம் மற்றும் எஸ்.டி., கூரியர் அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.சென்னை, தி.நகர் பசுல்லா சாலையில், 'சாய் சுக்கிரன் வெஞ்சர்' என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தை, நரேஷ் சுப்பிரமணி மற்றும் சந்தானகிருஷ்ணன் யுவராஜ் ஆகியோர் நடத்தி வருகின்றனர். இவர்கள் நெடுஞ்சாலை துறையில் டெண்டர் எடுத்து, சாலைகளில் ஒளிரும் விளக்கு பொருத்துதல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை, தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள, இந்த நிறுவனத்தில் நேற்று காலை, 9:30 மணியில் இருந்து சோதனையில் ஈடுபட்டனர்.அதேபோல, சென்னை தேனாம்பேட்டையில், எஸ்.எம்., ஸ்மார்ட் என்ற நிறுவனத்திலும் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சாந்தோம் அருளானந்தம் தெருவில், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் வீடு உள்ளது. அவர் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜாபர் சாதிக் வீடு அருகே உள்ள, நிறுவனம் ஒன்றில் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல, சென்னை பல்லாவரத்தில், வெட்டர் லைன் பகுதியில், எஸ்.டி., கூரியர் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் இயக்குனராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி எம்.பி., நவாஸ் கனி உள்ளார். தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.அவரது மூத்த சகோதரர் அன்சாரி, எஸ்.டி., கூரியரின் தலைமை இயக்குனராக உள்ளார். மற்றொரு சகோதரர் சிராஜுதீன் இணை இயக்குனராக உள்ளார்.எஸ்.டி., கூரியர் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, எஸ்.டி., கூரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை, 8:00 மணியளவில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல, சென்னை சங்கர் பகுதியில், ரியாஸ் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்துள்ளது. இதில், முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக, அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜாபர் சாதிக், சதானந்தம் நடத்திய

போதைப் பொருள் தயாரிப்பு தொழிற்சாலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

பேசும் தமிழன்
மார் 15, 2024 18:32

வீட்டுக்கு... 10.... 20...பேர் இருக்கிறார்கள்.... எப்படி செலவு கட்டுப்படியாகும் என்று பார்த்தால்... இப்படி தான் செலவு செய்கிறார்கள் போல ??


jayvee
மார் 15, 2024 13:06

அடுத்தது எந்த கொரியர் ?


duruvasar
மார் 15, 2024 08:34

இந்த கும்பல் ஒரு நல்ல கட்டமைப்புடன் செயல்ப்பட்டிருப்பது நன்கு புலனாகிறது.


Sriram V
மார் 15, 2024 08:24

Why no action against g square which is ly looting the land


VSaminathan
மார் 15, 2024 06:06

அம்புஜவள்ளி..-பெங்களூர்ல நடக்கு குண்டு வெடிப்பை பத்தி ஏதாவது தெரியுமா உனக்கு?


Ramesh Sargam
மார் 15, 2024 07:08

, அதைப்பற்றி மக்கள் உள்பட எல்லோரும் மறந்துவிட்டார்கள்.


Kasimani Baskaran
மார் 15, 2024 06:04

இந்த நாட்டின் உப்பை தின்று கொண்டு இந்த நாட்டுக்கே எதிரான நிலைப்பாட்டை எப்படித்தான் இதுகளால் எடுக்க முடிகிறதோ தெரியவில்லை.


D.Ambujavalli
மார் 15, 2024 04:42

கொடுக்க வேண்டியவர்களுக்கு தாராள தர்ம பிரபுவாக இருந்தவன். இப்போதுதான் மத்திய அமலாக்கத்துறைக்கு விழிப்பு வந்ததோ ? அன்றே சொன்னார் அண்ணாமலை, ‘வீட்டுக்கு ரெயிடு வரும்’ என்று அதற்காக இவனை யோக்கியன் என்று சொல்லவில்லை இதே யோக்கியன் நாட்டின் ‘மேலிடத்துக்கு’ வாரி வழங்கி இருந்தால் ஒரு பிரசனையும் வந்திருக்காது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை