உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலெக்டர் பெயரை சொல்லி மிரட்டுவதா?

கலெக்டர் பெயரை சொல்லி மிரட்டுவதா?

திருச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பிணியர், டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின், துரதிர்ஷ்டவசமாக கடந்த மாதம் உயிரிழந்தனர். இவற்றை தணிக்கை செய்த பின், சிகிச்சையில் தவறு இல்லை என்பது உறுதியானது. திருச்சி மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட இரண்டு மகப்பேறு டாக்டர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்துள்ளார்.திருச்சி மாவட்டத்தில் நான்கு மகப்பேறு மருத்துவமனை உட்பட, 10 அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கு, 34 மகப்பேறு டாக்டர்கள் தேவை. ஆனால், 11 மகப்பேறு டாக்டர்கள் தான் உள்ளனர். இந்த மாவட்டத்திற்கு, 23 மகப்பேறு டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். ஆனால், மாவட்ட கலெக்டர் விதிகளை மீறி, மகப்பேறு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.இதை, அரசு டாக்டர்கள் சங்கம் கண்டிக்கிறது. இடமாற்றம் செய்யப்பட்ட டாக்டர்களில் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். மற்றொருவர், மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். ஆனாலும், அவர்களை கலெக்டரின் பெயரைச் சொல்லிமிரட்டுகின்றனர்.தொடர்ந்து 72 மணி நேரம் டாக்டர் பணியாற்றும் சூழலில், காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.செந்தில்,தலைவர், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை