உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குகள் அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் ஆய்வு

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்குகள் அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சென்னையில் உள்ள அலுவலகத்தில், அமலாக்க துறையின் சிறப்பு இயக்குனர் ராகுல் நவீன் ஆய்வு நடத்தினார். மத்திய நிதியமைச்சகத்தின் கீழ், அமலாக்கத்துறை செயல்படுகிறது. அதன் இடைக்கால சிறப்பு இயக்குனராக, ராகுல் நவீன் பணியாற்றி வருகிறார்; 1993ம் ஆண்டு, ஐ.ஆர்.எஸ்., அதிகாரியான இவர், அமலாக்கத்துறையின் முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.ராகுல் நவீன் நேற்று சென்னைக்கு வந்தார். நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று காலை, 10:30ல் இருந்து, 12:15 மணி வரை சட்ட விரோத பணப்பரிமாற்றம், அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி; தற்போது அமைச்சர்களாக உள்ள உதயநிதி, அனிதா ராதாகிருஷ்ணன், நேரு, கீதா ஜீவன் உள்ளிட்டோர் தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்துஉள்ளார். அதேபோல, மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி விவகாரம்; மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில், அத்துமீறி நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச் சென்ற ஆவணங்கள் குறித்தும், பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி மீதான வழக்கு விபரங்களையும் ஆய்வு செய்துள்ளார்.செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்காத நிலையில், அதை மேலும் நீடிப்பதற்கு தேவையான ஆவணங்கள், ஆதாரங்களை திரட்டி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

spr
பிப் 23, 2024 20:05

"நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்" இது நடக்காதவரை மோடி செய்த அனைத்துமே விழலுக்கு இறைத்த நீர்


duruvasar
பிப் 23, 2024 15:43

இப்போதுதான் நமக்கு சிலந்தியின் உதவி வேண்டும், சரியா கோபால்.


sahayadhas
பிப் 23, 2024 12:59

ED பணமெல்லாம் BJP கையில் அதை கைபற்றி இந்திய கடனை அடையுங்கள்


Sathyam
பிப் 23, 2024 10:49

I Do not blame agencies as many have zero knowledge as how to they function or operate. The main culprit in this the bloody nasty Judiciary tem we have which is never serious about corruption. Why the Hell this nasty supreme courts or any other courts do not take cognizance or SUO MOTO when this evil urban naxal Kejrudeen, crook dacoit Hemant Soren Lalu illiterate thief son , do not appear for ED Summons, or when ED officers were brutally attacked in TN/WB, were these courts swallowing fevicol or chewing gum in their mouth or Dahi jam gayi kya mooh mein? More over you do not know the truth that UK/EU is know to house these fraudsters looters , fugitives, as their major economy thrives on blackmoney jihadis, terrorists and inspite of our agencies won their case in top most courts in UK the government is trying to shelter them give them political asylum and try to dent their eradication. If GOI wants they also can abduct these crooks like MOSSAD but the mistake is that we follow proper procedure and go legally. without knowing facts or half baked knowledge do not utter non-sense or rubbish here


G Mahalingam
பிப் 23, 2024 10:44

அரசியல் தலைவர்களை தர அடிப்பது மிகவும் கடினம். பெரும் வழக்கறிஞரை வைத்து வாய்த வாங்கி இழுத்து உள்ளார்கள். இதற்கு கொள்ளை அடித்த பணம் உதவுகிறது. இதனால் தண்டனை பெறுவதில் தாமதம் ஆகிறது.


J.V. Iyer
பிப் 23, 2024 06:50

சீக்கிரம் குற்றவாளிகளை தண்டியுங்கள் எசமான். குற்றம் செய்த எல்லா அமைச்சர்களையும் திகார் சிறைக்கு அனுப்புங்க எசமான். அவர்கள் லவுட்டிய பணத்தை முதலும், வட்டியாக வசூல் செய்யுங்க கணம் கோர்ட்டார் அவர்களே.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை