உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பம்பரம் கேட்டு ம.தி.மு.க., மனு ஆணையத்திற்கு உத்தரவு

பம்பரம் கேட்டு ம.தி.மு.க., மனு ஆணையத்திற்கு உத்தரவு

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தாக்கல் செய்த மனுவில், '1996 முதல் பம்பரம் சின்னத்தில், ம.தி.மு.க., போட்டியிட்டு வருகிறது.'கடந்த 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில், 6 சதவீதத்திற்கு குறைவான ஓட்டுகள் பெற்றதாக, அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. 2014 தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. 'வரும் லோக்சபா தேர்தலில், பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி, தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, ''விண்ணப்பம் முறையாக பரிசீலிக்கப்படும்,'' என்றார். இதையடுத்து, விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை