உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிதாக எதுவும் இல்லை உயரிய பதவிக்கு அழகல்ல

புதிதாக எதுவும் இல்லை உயரிய பதவிக்கு அழகல்ல

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: கவர்னர் உரை, திராவிட மாடல் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையை படம் பிடித்து காட்டுவதாக அமைந்துள்ளது. கொள்கை திட்டங்கள் எதுவும் இல்லாததால், இந்த உரையை படிக்காமல், இதில் உள்ள கருத்துக்களில் இருந்து முரண்படுகிறேன் என சொல்லிவிட்டு, கவர்னர் சென்று விட்டாரோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: சட்டசபையில் கூட்ட துவக்கத்தின் போது தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவின் போது தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபு. அதை மீற வலியுறுத்தியதோடு, ஏற்கனவே ஒப்புதல் அளித்த உரையை கவர்னர் புறக்கணித்திருப்பது, அவர் வகிக்கும் உயரிய பதவிக்கு அழகல்ல.அதேநேரம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அதிகரித்து வரும் நிலையில், தார்மீக அடிப்படையில், உண்மைக்கு மாறான விபரங்களை அளித்து உரையாற்றும்படி, கவர்னரை கட்டாயப்படுத்தும் தி.மு.க., அரசின் நடவடிக்கையும் கண்டனத்துக்கு உரியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை