| ADDED : மே 27, 2024 02:01 AM
ராமேஸ்வரம் : பாம்பன் கடலில், 550 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி நடக்கிறது. இப்பாலம் நடுவில் கப்பல்கள், படகுகள் கடந்து செல்லும் வகையில், 'லிப்ட்' முறையிலான துாக்கு பாலத்தை பொருத்த ரயில்வே அமைச்சகம் பணிகளை மேற்கொண்டுள்ளது.இந்த புதிய துாக்கு பாலம் 700 டன்னில் வடிவமைத்து, மார்ச் 13ல் பாம்பன் கிழக்கு கடற்கரையில் இருந்து புதிய பாலம் வழியாக நகர்த்தப்பட்டு, பாலம் நடுவில் கொண்டு செல்லப்பட்டது.இந்த பாலத்தை பொருத்தும்போது, இதன் பாரத்தை தாங்க, 11 மீ., ஆழமுள்ள கடலில் நான்கு இரும்பு உருளைத் துாண்களை ஊன்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.இப்பணி முடிய 10 நாட்கள் ஆகும் எனவும், துாக்குப் பாலத்தை பொருத்தி ஆய்வு செய்யும் வரை, மூன்று மாதத்திற்கு பழைய துாக்குப் பாலம் திறக்கப்படாது எனவும் ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.