உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதி வீட்டில் போலீஸ் சோதனை

பயங்கரவாதி வீட்டில் போலீஸ் சோதனை

மாணிக்கம்பாளையம் : ஈரோடு, மாணிக்கம்பாளையம், ஹவுசிங் யூனிட், முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த, நில புரோக்கர் மகபூப் மகன் ஆசிப் முஸ்தாகீர், 28, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இளைஞர்களை சேர்க்க முயற்சித்ததாக கைதானார்.தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. குழுவினர், 2022 ஜூலையில் இவரிடம் ரகசிய விசாரணை நடத்தி, ௧௦ பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம், முஸ்தாகீருடன் ஈரோட்டுக்கு வந்து, அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அவரது தந்தை மகபூப் மற்றும் சகோதரர் வீட்டில் இருந்தனர்.அரை மணி நேரம் சோதனை நடந்தது. எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. பின், கோவை மத்திய சிறையில் முஸ்தாகீர் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை