உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  அரசியல் தலைவர்கள் கண்டனம்

 அரசியல் தலைவர்கள் கண்டனம்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கையும், பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்து விட்டதே, இத்தகைய கொடூர குற்றச்செயல்களுக்கு முழு முதல் காரணம். அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா என்ற அச்சத்துடனேயே, ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலநிலை, இந்த ஆட்சியில் ஏற்பட்டிருப்பது, தமிழகத்திற்கு தலைகுனிவு. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: ஒவ்வொரு நாள் விடியும் போதும், இன்று எந்த பெண்ணுக்கு எங்கே கொடுமை நடந்துள்ளதோ என்ற பதற்றத்தில், நாளிதழ்களை பிரிக்க வேண்டியுள்ளது. இத்தனை ஆயிரம் போலீசார் இருந்தும் கூட, நம் வீட்டு பிள்ளைகளை நாம் பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டியிருக்கிறது. கைதுகள் தான் அதிகரிக்கிறதே தவிர, தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக, பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்த கோரி, பா.ஜ., பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு ஆட்சி இனியும் தமிழகத்தில் தொடர கூடாது. பா.ம.க., தலைவர் அன்புமணி: தி.மு.க., ஆட்சியில், எத்தகைய கொடூர குற்றங்களை செய்தாலும் தப்பி விடலாம் என்ற துணிச்சல் தான், இத்தகைய கொலைகளுக்கு காரணம். தி.மு.க., ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலை தான் உள்ளது. ஆளும் கட்சியினருக்கு துணை போகும் சமூக விரோதிகள் மட்டும் தான், இந்த ஆட்சியில் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர். த.வெ.க.,வின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா: தமிழகத்தில் ஒவ்வொரு நாளையும் அச்சத்திலேயே எதிர்கொள்ளும் நிலைக்கு தமிழக பெண்கள் ஆளாக்கப் பட்டுள்ளனர். பொதுவெளியில் பெண்கள் எங்கும் சுதந்திரமாக சென்று வர முடியாத அளவிற்கு இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிரள வைக்கின்றன. இவ்வாறு கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி