உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் காலியாக செல்லும் தனியார் மினி பஸ்கள்

பெண்களுக்கு இலவச பயண திட்டத்தால் காலியாக செல்லும் தனியார் மினி பஸ்கள்

சென்னை: அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் அறிவிக்கப்பட்டதால், தனியார் மினி பஸ்களில் கூட்டம் இல்லை. இதனால், நஷ்டத்தில் இயக்குவதாக, உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மினி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது, மொத்தம் 3,000 மினி பஸ்களை இயக்கி வருகிறோம். நகரங்களில் இருந்து கிராமங்களுக்கும், பஸ், ரயில் நிலையங்களில் இருந்து கல்லுாரி, மருத்துவமனைகளை இணைக்கும் பகுதிகளுக்கும் அதிகளவில் மினி பஸ்கள் இயக்கி வருகிறோம். எங்களது பஸ்களில் பெண்கள் தான் அதிகளவில் செல்வர். ஆனால், அரசு டவுன் பஸ்களில், பெண்களுக்கான இலவச பயண திட்டம் இருப்பதால், காத்திருந்து அவற்றில் பயணம் செய்கின்றனர். டீசல், உதிரிபொருட்கள் விலை உயர்வு, ஊழியர்களுக்கான செலவு என, எங்களுக்கு அன்றாட செலவுக்கு கூட, கலெக் ஷன் கிடைப்பதில்லை. இதனால், மினி பஸ் தொழில் நலிவடையும் நிலையில் இருக்கிறது. எனவே, பெண்கள் இலவச பயண திட்டத்தை, தனியார் மினி பஸ்களிலும் செயல்படுத்தினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கான கட்டணத்தை, அரசு எங்களுக்கு தர வேண்டும். இதனால், கிராமப்புறங்களில் பயணியருக்கு கூடுதல் பஸ் வசதியும் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:

பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை, மினி பஸ்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என, அவற்றின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து, தமிழக அரசு தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

சுந்தரம் விஸ்வநாதன்
டிச 10, 2025 17:06

அஜ்ர்ஜுனன் அவர்களே, மருத்துவமனையில் உங்களூக்கு மன நல மருத்துவர்கள் கிடைப்பார்கள். உறுப்பினர் அட்டை மட்டுமே தேவை. மூளை தேவை இல்லை


Sivak
டிச 10, 2025 14:29

விளம்பரத்திற்காக மற்றும் ஓட்டிற்காக மக்கள் வரிப்பணத்தை இலவசம் என்ற பெயரில் இறைத்து விட்டு... தமிழ் நாட்டின் நிதி நிலைமையை மோசமாக்கிய திருட்டு திமுக அரசு ...10 லட்சம் கோடி கடன் ...


Rengaraj
டிச 10, 2025 11:15

இலவச பயண திட்டம் திமுக அரசால் தொடங்கப்பட்டது. அந்த அரசு தேர்தலில் தோல்வியுற்றால் திட்டமும் கைவிடப்படும். தனியார் பஸ் கோரும் இந்த சலுகை மாதிரி வேறு ஒன்றை தனியார் ஆட்டோக்களும் வருங்காலத்தில் கேட்கமாட்டார்கள் என்று உறுதியாக சொல்லமுடியாது. இலவச பயண திட்டத்தை நிதிச்சுமை ஏற்படாமல் அரசுக்கு பயனுள்ள வகையில் மாற்ற மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியம்.


sivaram
டிச 10, 2025 11:07

கேரளா குடிமக்கள் சுய கௌரவம் பார்ப்பவர்கள் அவர்கள் கை காசு கொடுத்து பஸ்சில் பயணம் செய்கிறார்கள் அதனால் அங்கே அரசாங்கம் இலவச பஸ் பயணம் திட்டம் கொண்டு வரவில்லை, ஆனால் நம் தமிழ் நாட்டிலோ, விடியல் அரசு கஜானாவை தினமும் துடைத்து கொண்டே இருக்கிறது, வோட்டிற்க்காக மக்களை ஏமாற்றும் நிலைமை என்று மாறுமோ தெரியவில்லை


rama adhavan
டிச 10, 2025 19:39

இரண்டு கோடிக்கு மேல் நம் மாநிலத்தில் இலவச அரிசி கார்டு வைத்துள்ள, இலவச அரிசி உண்ணும் ஏழைகள். எனவே தன்மானத்தை எதிர்பார்க வாய்ப்பு இல்லை.


R Hariharan
டிச 10, 2025 09:42

தனியார் கலீல் கட்டணம் வசூலிக்க வேண்டும்.


karthik
டிச 10, 2025 09:35

கலாச்சாரத்தியும் பொருளாதாரத்தையும் அழிப்பது தான் திரவிட கும்பல்களின் வேலை.. சாதனை


Ram
டிச 10, 2025 08:58

மினி பஸ்களுக்கு இதனை விரிவுபடுத்தினால், கவுன்சிலர்கள்தான் அப்புறம் மினிபஸை இயக்க ஆரமிப்பார்கள் . இது ஒரு அபாயகரமான சிந்தனை


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 10, 2025 09:59

ஏற்கனவே எம் எல் ஏக்களின் அமைச்சர்களின் பஸ்களை வட்டம் மாவட்டம்தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். கவுன்சிலர்கள் இயக்கினால் என்ன?


VENKATASUBRAMANIAN
டிச 10, 2025 08:15

திமுகவின் குடும்பத்திடம் வசூல் செய்ய வேண்டும்.


GMM
டிச 10, 2025 08:08

பெண்களுக்கு இலவச பயணம் ஒரு ஓட்டு திட்டம். அரசு, தனியார், மினி பஸ் மற்றும் ஆட்டோ போன்ற அனைத்திற்கும் விரிவு படுத்தி, ஏற்கனவே ஏற்பட்ட இழப்பீட்டை திமுக விடுவிக்க மன்றம் தீர்வு காண வேண்டும். மினி பஸ் ஒரு சிறந்த திட்டம். பிற மாநிலங்களில் இல்லை?


rama adhavan
டிச 10, 2025 07:47

மினி பஸ்கள் சந்து பொந்துகளில் தானே செல்கின்றன. அதனால்தான் அவற்றிற்கு கோடிக்காணக்கில் செலவாகும் பெர்மிட் கிடையாது.மினி பஸ் டவுன் பஸ் ரூட்களில் எங்கு செல்கிறது? எனவே இந்த கோரிக்கை பொய்யானது.


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 10, 2025 10:05

உண்மையான கருத்து. எங்கள் ஊரில் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மினி பஸ் ஆட்சி மாறியதும் இன்று வரை அரசியல் காரணங்களுக்காக இயக்கப்படவே இல்லை. எனவே மினி பஸ் இயக்கத்துக்கும் ஓசி பயணத்திற்கும் தொடர்பு இருப்பதாகத்தெரியவில்லை. மாநகராட்சி எல்லைக்குள் இருந்தும் அதிக வரி கட்டியும் எந்த பஸ் வசதியும் இல்லாமல் இருக்கும் ஒரே இடம் அகில இந்தியாவில் நாங்களும் எங்கள் ஏரியா மக்களும்தான். முன்பு வேலுமணி அமைச்சராக இருந்த போது அவரை சந்தித்து கோரிக்கை வைத்ததில் எங்கள் ஏரியாவுக்கு புதிய பஸ்கள் வந்தன. மக்களும் அதிக அளவில் பயன் பெற்றனர். ஆட்சி மாற்றம் செய்த கோலம் இப்போது நாங்கள் 1947 க்கு முந்தைய காலத்தில் இருக்கிறோம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை