உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து பா.ஜ., வேட்பாளர்கள் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்: திமுக புகார்

அனைத்து பா.ஜ., வேட்பாளர்கள் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்: திமுக புகார்

சென்னை: ‛‛ அனைத்து பா.ஜ., வேட்பாளர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்'' என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் தி.மு.க., புகார் அளித்து உள்ளது.

பறிமுதல்

சென்னை, எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற, 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த, 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பா.ஜ., உறுப்பினருமான சதீஷ், அவரது சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

சோதனை

திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

நெல்லையில் பறிமுதல்

இதனிடையே, நெல்லை மேலப்பாளையத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர் கணேஷ் என்பவரது வீட்டில் ரூ.2 லட்சம், வேஷ்டி, சேலை, மதுபாட்டீல், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வருமான வரித்துறை விசாரணை

இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது: அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நேரத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால், வருமான வரித்துறை தான் விசாரணை செய்வார்கள். பறிமுதல் தொடர்பான அனைத்து தகவலும் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் உரிய விசாரணை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க., புகார்

தி.மு.க.,வின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி, ‛‛ அனைத்து பா.ஜ., வேட்பாளர்களின் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும்'' என தேர்தல் கமிஷனிடம் புகார் அளித்து உள்ளார்.

என்னை டார்கெட் செய்கின்றனர்

பணம் பறிமுதல் தொடர்பாக நயினார் நாகேந்திரன் கூறியதாவது: எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்தப்பணம் எனக்கு சொந்தமானது இல்லை. எனக்கு நெருக்கடி கொடுக்க சிலர் என்னை டார்கெட் செய்கின்றனர். என்னை குறி வைக்கின்றனர் என்பது மட்டும் தெரிகிறது. எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதால், அதை பொறுத்து கொள்ள முடியாமல் பல நடவடிக்கைகள் எடுக்கின்றனர். மக்களை திசைதிருப்ப திமுக.,வினர் செய்த வேலை இது. எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. வெற்றி உறுதியாகிவிட்டது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Saai Sundharamurthy AVK
ஏப் 08, 2024 06:11

ஆர்.எஸ்.பாரதி மீது சந்தேகம் உள்ளது. அவர் தான் இந்த சதி வேலையை செய்திருக்க வேண்டும். ☺️


ராமகிருஷ்ணன்
ஏப் 08, 2024 05:49

அறிவு கெட்ட ஆபீஸ் வாட்ச்மேன் திமுக அதிமுக வேட்பாளர்களை சொல்ராங்க


காவேரிப்பட்டியான்
ஏப் 07, 2024 22:02

ஏன் ஒரு கருத்துக்கூட வரவில்லை?


பாரதி
ஏப் 07, 2024 20:09

ஏன்பா ஒரு சோதனையை செய்ய எவ்வளவு செலவாகுது... பிச்சைக்காரன்களை சோதனை பண்றதுக்கு அரசுக்கு, அதிகாரிகளுக்கு செலவுக்கு யார் பணம் தருவார்.... நீங்க தருவீங்களா...


காவேரிப்பட்டியான்
ஏப் 07, 2024 19:35

அதே போல் எல்லா தொகுதியிலும் கண்காணிக்க தேர்தல் ஆணையம் வழி வகை செய்ய வேண்டும்


Anandraj Aga
ஏப் 07, 2024 18:20

D M K அண்ணாமலை trapple vilunthu vittathu Enimel election commission ID ED all Dmk Persons home and Admk Persons home raid wil start


பேசும் தமிழன்
ஏப் 07, 2024 17:44

சொல்லப்போனால்.... அனைத்து திமுக கூட்டணி வேட்பாளர்கள் இடங்களில் தான் சோதனை நடத்த வேண்டும்.


J.V. Iyer
ஏப் 07, 2024 16:58

திருடர்கள் ஓடிக்கொண்டே திருடன், திருடன் என்று கத்தும் பழக்கம் இங்கு வந்து விட்டது!


h
ஏப் 07, 2024 16:23

all dmk candidates and their friends place should be searched setup bjp candidate kku.


ManiK
ஏப் 07, 2024 15:26

திமுக சீக்கிரமாக கூவும் போதே இது planned சதினு தெரியுது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை