உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எளிமையான பிரசாரமாக இருக்க வேண்டும் கட்சியினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்

எளிமையான பிரசாரமாக இருக்க வேண்டும் கட்சியினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்

சென்னை:''ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, தி.மு.க., அரசு என, எளிமையாக புரியும் வகையில் பிரசாரம் செய்ய வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் லோக்சபா தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.அக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:வரும் 26ம்தேதி, மாலை 7:00 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடம், புதுப்பிக்கப்பட்ட அண்ணாதுரை நினைவிடம் திறக்கப்படுகின்றன. பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்நினைவிடங்கள் திறப்பு விழாவில், அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.உரிமைகளை மீட்க, 'ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் லோக்சபா தொகுதிவாரியாக நடந்த கூட்டங்கள் அனைத்தும், பெரும் வெற்றி அடைந்துள்ளன. மிக பிரமாண்டமாக நடத்திக் காட்டி விட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை, 'டிவி'யில் பார்த்து பிரமித்தேன். இக்கூட்டங்கள், கட்சியினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன.தேர்தலில், 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் ஓட்டுகள், அபரிமிதமாக இருக்க வேண்டும்.தி.மு.க., ஆட்சியின் திட்டம் பற்றி எளிமையாக பிரசாரம் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, தி.மு.க., அரசு என எளிமையாக புரியும் வகையில் பிரசாரம் செய்ய வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

'இண்டியா' தலைவர்கள்'

கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'முதல்வரின் பிறந்த நாள் கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும்' என்றார். அதற்கு ஸ்டாலின், 'எனக்கு தனியாக பிறந்தநாள் கூட்டம் நடத்த வேண்டாம்; தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு 'இண்டியா' கூட்டணி தலைவர்களை அழைத்து நடத்தப்படும்' என, பேசியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வேண்டும்'

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்: பிப்., 26ல், 'இல்லம்தோறும் ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் திண்ணை பிரசாரத்தை துவக்க வேண்டும் வரும், 24, 25ம் தேதிகளில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தனித்தனியாக, தொகுதி பார்வையாளர்கள், 'பூத்' கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை கொண்டு கூட்டங்கள் நடத்த வேண்டும்  மாலை நேரங்களில் பூத் கமிட்டியினர் வீடுவீடாக சென்று 'இல்லம்தோறும் ஸ்டாலின்' குரல் என்ற பிரசாரத்தை செய்ய வேண்டும்  பா.ஜ., வுடன் மறைமுகக கூட்டணி வைத்துள்ள அ.தி.மு.க.,வை முழுமையாக வீழ்த்தி, ஸ்டாலின் குரல் டில்லியில் நிறைவேறுவதை உறுதி செய்ய வேண்டும் ஸ்டாலினின், 71வது பிறந்தநாள் பொதுக்கூட்டங்களை மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தமிழகம் முழுதும் மாநகராட்சி, நகராட்சிகளில் நடத்த வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

'மாவட்ட செயலர்களின்பதவி பறிக்கப்படும்'

கூட்டத்தில், தி.மு.க., மாவட்ட செயலர்களிடம் பூத் கமிட்டிகளின் எண்ணிக்கை விபரத்தை கேட்டறிந்தபோது, சென்னையில் ஒரு மாவட்டச் செயலர் எண்ணிக்கை விபரத்தை தவறாக கூறினார். அவர் தெரிவித்த தகவல் தவறானது. இனிமேலாவது பூத் கமிட்டி எண்ணிக்கை விபரத்தை சரியாக வைத்துக் கொள்ளும்படி முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். மாவட்ட செயலர் ஒருவர், தொகுதியின் வேட்பாளர் பெயரை குறிப்பிட்டு பேசினார். அப்போது ஸ்டாலின் குறிக்கிட்டு, வேட்பாளர் பெயரை நீங்க அறிவிக்க வேண்டாம்; நான்தான் அறிவிக்க வேண்டும்' என்றார்.மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரையில் கட்சியில் என்னன்ன பணிகள் செய்கிறீர்கள். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுடன் எந்தந்த மாவட்ட செயலர்கள் மறைமுகத் தொடர்பு வைத்திருக்கிறீர்கள் என்ற அனைத்து விபரங்களும் எனக்கு தெரியும்.தேர்தலில் ஓட்டுகள் குறைந்தால், மாவட்ட செயலர்கள் மாற்றங்களை கட்சியிலும், ஆட்சியிலும் எதிர்பார்க்கலாம் என, ஸ்டாலின் குறிப்பிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை