உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இப்படித்தான் ஏடாகூடமா மாட்டிட்டு முழிக்கணும்

இப்படித்தான் ஏடாகூடமா மாட்டிட்டு முழிக்கணும்

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:

சேலம், ஆத்துார் விவசாயிகள் ஜாதி பெயரை குறிப்பிட்டு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது குறித்து, சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். வட மாநிலத்தில் ஜாதியை, பெயரின் பின்னால் குறிப்பிடுவது வழக்கம். வடமாநில அதிகாரிகள் யாரேனும் விவசாயிகளின் பெயருக்கு பின், ஜாதி பெயரை குறிப்பிட்டு அனுப்பி இருக்கலாம். இருப்பினும் எதிர்காலத்தில் இதுபோல நடக்கக்கூடாது.

டவுட் தனபாலு:

வடமாநில அதிகாரிகளா இருந்தாலும், தாங்கள் பணியாற்றும் மாநிலத்தின் கலாசாரம், பண்பாட்டை தெரிஞ்சுக்கணும் அல்லது மாநில அதிகாரிகளிடம் கேட்டாவது தெரிஞ்சுக்கணும்... இல்லை என்றால், இப்படித்தான் ஏடாகூடமா மாட்டிட்டு முழிக்கணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!---

பொள்ளாச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன்:

பொள்ளாச்சி நகராட்சியில் எந்த பணியானாலும், கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் மட்டுமே நடக்கிறது. என் தொகுதி மேம்பாட்டு நிதியில், நகரில் ஐந்து இடங்களில் பயணியர் நிழற்கூரை அமைக்க, இரு ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, இரு நிழற்கூரை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான பூமி பூஜையில் நகராட்சி அதிகாரிகள் யாருமே பங்கேற்கவில்லை.

டவுட் தனபாலு:

நீங்க நடத்துற பூமி பூஜையில அதிகாரிகள் பங்கேற்றா, நாளைக்கே அவங்க ராமநாதபுரத்துக்கோ, துாத்துக்குடிக்கோ துாக்கி அடிக்கப்படுவாங்களே... அப்ப, அவங்களை உங்களால காப்பாற்ற முடியுமா என்ற, 'டவுட்'டுக்கு விளக்கம் தாங்களேன்!---

பா.ஜ.,வைச் சேர்ந்த ம.பி., முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்:

சில நேரங்களில் பட்டாபிஷேகத்துக்காக காத்திருக்கும் போது, வனவாசம் செல்ல வேண்டியிருக்கும். நான் எங்கும் செல்ல மாட்டேன். மத்திய பிரதேசத்திலேயே வாழ்ந்து, இங்கேயே என் உயிரை விடுவேன்.

டவுட் தனபாலு:

கிட்டத்தட்ட, 18 வருஷமா முதல்வர் பதவியில இருந்தவரை, கீழே இறக்கி விட்டதுல பயங்கர விரக்தியில இருப்பது நல்லாவே தெரியுது... 'பழையன கழிதலும்; புதியன புகுதலும் காலம் காலமாக நடப்பது தானே' என மனதை தேற்றி கொண்டால், மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

mukundan
ஜன 05, 2024 15:45

வெறும் ஜாதியை சேர்த்து குறிப்பிடுவது எப்படி குற்றம் ஆகும்? அவர்கள் ஜாதியை இதன் மூலம் இழிவு படுத்துவது போல எப்படி ஆகும்? பெயருக்கு முன்னணி தலித் என்று ஆடை மொழியோடு வளம் வரும் சிலர் உள்ள இந்த தமிழ்நாட்டில் இது எனக்கு குற்றமாக தோன்ற வில்லை.


ramesh
ஜன 10, 2024 17:58

தாழ்த்த பட்ட வகுப்பினர் என்று உயர் ஜாதி இனரால் தீண்டாமை மற்றும் ஏற்ற தாழ்வு நடை பெறுவதை தடுக்கவே ஜாதி பெயரோடு குறிப்பிட வேண்டாம் என்று சொல்ல படுகிறது.இதுவே சரியான செயல் பாடு .உயர் ஜாதி இணர் தங்கள் பெயரை வெளியே சொல்லுவதால் பெருமை படலாம் .அதுவே மற்ற ஜாதியினர் என்னும் பொது ......


வெகுளி
ஜன 05, 2024 15:32

எந்த ஜாதி பெயரும் இழிவல்ல ...


வெகுளி
ஜன 05, 2024 15:31

இவர்கள் யாராவது சொல்லாமல் வடநாட்டு அதிகாரிகளுக்கு எப்படி இங்கு யாரு என்ன ஜாதின்னு தெரியும்?.....


Natesan B
ஜன 11, 2024 17:59

நில பட்டாவில் ஜாதி பெயர்கள் இன்னுமும் உள்ளது....


sahayadhas
ஜன 05, 2024 13:11

ஜாதி, மதம், பேச்சு மூன்றும் வெல்லும்


KavikumarRam
ஜன 05, 2024 11:14

. அந்த காலத்தில் இருந்து பத்திரப்பதிவின் போது தாத்தா அப்பா பெயர் குறிப்பிடும்போது ஜாதியுடன் சேர்த்து பெயரை குறிப்பிடுவது இன்று வரைக்கும் வழாக்கம் தான். ஈடி அதிகாரிகள் அதிலிலிருந்து பெயரை எடுத்து பயன்படுத்தி இருக்கலாம். இதில் ஈடி அதிகாரிகளின் தவறு என்ன இருக்கிறது.ஜாதி தமிழகத்தில் இல்லவே இல்லென்னு சீன் போடுறது எல்லாம் வெறும் அரசியல் மட்டுமே.


Suppan
ஜன 05, 2024 13:36

ராம் சாமி சாதியை ஒழித்துக்கட்டிவிட்டார் என்று கூப்பாடு போடும் திருட்டு திராவிடக்கட்சிகள் சிலரை தேவரய்யா என்றும், நான் வ...ல் கவுண்டர் மவன் என்றும் கூவுவது சரியா? ஒட்டு கிடைக்காது என்ற பயமோ?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 05, 2024 10:29

மோடி என்பதும் காந்தி என்பதுமே ஜாதிப்பெயர்கள் என்பது அண்ணாமலையாருக்கு தெரியாதா?


sahayadhas
ஜன 05, 2024 09:43

ஜாதி, மதம், பேச்சும் போதும்.


வீரபத்திரன்,கருங்காலக்குடி
ஜன 05, 2024 13:19

அதே மாதிரி அரிசி மூட்டைக்கும் அப்பத்துக்கும் மதம் மாறுவதை போதும் என்று சொல்...


Sathyasekaren Sathyanarayanana
ஜன 05, 2024 09:28

இட ஒதுக்கீடு கேட்பதற்கு மட்டும் தான் ஜாதிப்பெயரை சொல்லலாம், மற்ற விஷயங்களுக்கு சொன்னால் தவறு. கேவலம்.


மணியன்
ஜன 05, 2024 09:04

சௌஹான் மோடிக்கு இணையான தலைவர்.ம.பி பின் தங்கிய மாநிலம் என்ற நிலையிலிருந்து தன்னிறைவு மாநிலமாக மாற்றிய சாதனை முதல்வர்.தன்னலமற்று நாட்டுக்கு உழைக்கும் அவரை ஓரங்கட்டினால் பாஜக கடும் நெருக்கடிக்கள்ளாகும்.


GMM
ஜன 05, 2024 08:32

ஜாதி பெயர் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்புவது என்ன தவறு.? சாதி பெயர் குறிப்பிட்டு தான் இட ஒதுக்கீடு. ஆவண பதிவில் பெயர் எப்படி உள்ளதோ அதனை copy செய்து தான் அனுப்ப வேண்டும்.


rameshkumar natarajan
ஜன 05, 2024 09:38

I think this person doesn.t know the culture of Tamil Nadu. In Tamil Nadu, there's no practice of putting e name for the past 50 - 80 years.


Natesan B
ஜன 11, 2024 17:58

நில பட்டாவில் ஜாதி பெயர்கள் இன்னுமும் உள்ளது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை