மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
10 hour(s) ago | 16
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
10 hour(s) ago | 5
சென்னை:தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் போல நடித்து, பணம் பறிக்கும் கும்பலிடம் உஷாராக இருக்க வேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.லோக்சபா தேர்தலை ஒட்டி, தனி நபர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, மாநிலம் முழுவதும், 702 பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், போலீசாரும் இடம் பெற்றுள்ளனர். எனினும், மர்ம நபர்கள், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் போல நடித்து, பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக, காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அடையாள அட்டை அணிந்து இருப்பர். இவர்கள் தங்களை அறிமுகம் செய்து சோதனையில் ஈடுபடுவர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மீது சந்தேகம் எழுந்தால், உடனடியாக அவசர போலீஸ் எண் 100 மற்றும் 112க்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.மர்ம நபர்களிடம், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
10 hour(s) ago | 16
10 hour(s) ago | 5