உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வருடன் அமெரிக்க துாதர் சந்திப்பு

முதல்வருடன் அமெரிக்க துாதர் சந்திப்பு

சென்னை:தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு, அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்க, முதல்வர் ஸ்டாலின் வரும், 27ம் தேதி அந்நாட்டிற்கு செல்கிறார். மின் வாகனம் உள்ளிட்ட துறைகளில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை நேற்று, சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதர் கிறிஸ்டோபர் ஹாட்ஜஸ் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, தொழில் துறை அமைச்சர் ராஜா, தலைமை செயலர் முருகானந்தம் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை