உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமஸ்கிருதத்தை தவிர்க்கும் தருணத்தில் கலாசாரத்தை இழந்துவிட்டோம்: கவர்னர் கவலை

சமஸ்கிருதத்தை தவிர்க்கும் தருணத்தில் கலாசாரத்தை இழந்துவிட்டோம்: கவர்னர் கவலை

சென்னை: ''சமஸ்கிருத மொழியை நாம் தவிர்க்கும் தருணத்தில் நமது கலாசாரத்தை இழக்க துவங்கி விட்டோம்'' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று (ஆக.,19) சமஸ்கிருத தின விழா நடைபெற்றது. இதில், கவர்னர் ஆர்.என். ரவி உடன் தனியார் தொண்டு நிறுவன பொது செயலர் அம்ரிதா பிரித்வி, தலைவர் ஜெயதேவ், மத்திய சமஸ்கிருத பல்கலை துணைத் தலைவர் ஶ்ரீநிவாஸ் வரகெடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சமஸ்கிருதம் மற்றும் இலக்கியத்திற்கு பங்காற்றிய பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு நினைவுப் பரிசினை கவர்னர் ரவி வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ரவி, ''சமஸ்கிருத மொழியை நாம் தவிர்க்கும் தருணத்தில் நமது கலாசாரத்தை இழக்க துவங்கி விட்டோம். நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு சமஸ்கிருத மொழியை எடுத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்'' எனப் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Kesavan
ஆக 20, 2024 10:05

சமஸ்கிருத கலாச்சாரம் யாருக்குத் தேவையோ அவர்கள் அதை பின்பற்றலாம் எந்த தடையும் இல்லை சமஸ்கிருத கலாச்சாரத்தை எல்லா மக்களும் மீதும் திணிப்பது கண்டனத்திற்குரியது


தமிழ்வேள்
ஆக 20, 2024 12:06

திராவிடனுக்கு மிகவும் பிடித்தமான , கலாச்சாரத்தை நீங்கள் பின்பற்றலாம் ..தடை ஏதுமிலை .....


sankaranarayanan
ஆக 19, 2024 22:04

இவர்களில் ஒருவரான சம்ஸ்கிருத பாரதி தலைவர் ஆர் ஆர் எனப்படும் ராமச்சந்திரன் அவர்கள் சம்ஸ்கிருதத்தில் பெரிய மாமேதை தமிழ்நாட்டில் சம்ஸ்கிருதம் பரவ மிகவும் பாடுபட்டு வருகிறார் அன்னாரின் சேவையை பாராட்டி எல்லோரும் மகிழ்வோம்


ramesh
ஆக 19, 2024 21:29

ஒவொரு மொழி பேசுபவர்களிடமும் அந்த பகுதிக்கேற்ப கலாச்சாரம் வேறுபாடும் .சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கு மட்டுமே அதை தவிற்பவர்களுக்கு கலாச்சாரத்தை இழக்கலாம் .மற்றவர்களுக்கு எந்த இழப்பும் ஏற்பட போவதில்லை


ramesh
ஆக 19, 2024 21:25

சமஸ்கிருதம் கண்டிப்பாக வேண்டும் என்பவர்கள் படிக்கலாம் .மற்றவர்களுக்கு அது தேவை இல்லை ..விரும்பினால் படிக்கலாம் .ஆனால் திணிக்க முயற்சிக்க கூடாது


J.Isaac
ஆக 19, 2024 21:10

முதலில் கவர்னருக்கு சமஸ்கிருதம் பேச தெரியுமா?


ஆரூர் ரங்
ஆக 19, 2024 18:35

தூயதமிழ் என்பதே ஏற்கக் கடினமாக ஒன்று. இரு மொழிகளிலும் பரஸ்பரம் வார்த்தைகள் ஒரே பொருளில் அமைந்துள்ளன சங்க இலக்கியங்களிலும் சமஸ்கிருத வார்த்தைகள் விரவிக் கிடக்கின்றன. ஆகப் பழைமையான தொல்காப்பியம் என்ற பெயருக்கு சமஸ்கிருதத்தில் அதே பொருள்தான் என மூத்த ஆராய்ச்சியாளர் நாகநாதன் அவர்கள் கூட கூறினார். ( காவ்யம் என்பதன் தமிழ்ச்சொல் காப்பிபம்)


ஆரூர் ரங்
ஆக 19, 2024 21:11

திரு.நாகசாமி என திருத்தி வாசிக்கவும்.


அப்பாவி
ஆக 19, 2024 18:17

சமஸ்கிருதம் தானாகப் போய்ச் சேர்ந்தது. தேவ பாஷைன்னு சொல்லிச் சொல்லியே மேலெ கொண்டு போயிட்டாங்க. பிராகிருதமும், பாளி மொழியும் மக்களுக்கான மொழிகள். அவையும்.போயாச்சு. இந்தி வந்திச்சு. அதையும் மத்தவங்க மேல் திணிக்க முயற்சி நடக்குது. தமிழ் ஒன்றே அன்று முதல்.இன்று வரை இருக்கிறது.


ஆரூர் ரங்
ஆக 19, 2024 21:10

நாட்டில் பதினெட்டு சமஸ்கிருத பல்கலைக் கழகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைத் தவிர மற்றவை காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவானவை. வெளிநாடுகளில் சுமார் 30 பல்கலைக் கழகங்களிலும் நூற்றுக்கணக்கான பள்ளிகளிலும் சமஸ்கிருதம் பயிற்றுவித்தலும் ஆராய்ச்சியும் நடக்கின்றன. தமிழுக்கென இருக்கும் ஒரே பல்கலைக்கழகமும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 90 சதவீத தமிழர்களுக்கு தமிழ் என்றே உச்சரிக்கத் தெரியவில்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை