மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் தரணும்
6 minutes ago
தி.மு.க.,வின் வளர்ச்சியை பொறுக்காமல் தொந்தரவு
7 minutes ago
'திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்ய, 30 நாட்கள் அவகாசம் இருக்கிறது. நாங்கள் மேல்முறையீடு செய்வோம். அதனால், உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை' என, தி.மு.க., செய்தி தொடர்பாளர் ஒருவர் பேசி உள்ளார். தற்போது, மேகதாது அணை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அதில், கர்நாடக அரசு அணை கட்டக்கூடாது என தீர்ப்பு வந்து, 'மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ளது. அணை கட்டாமல் இருக்க முடியாது' என கூறி, கர்நாடகா அணை கட்டினால், முதல்வர் ஸ்டாலின் தன் முகத்தை எங்கு கொண்டு வைப்பார்? 'நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டாம் என, தமிழக முதல்வரே கூறி விட்டார். அதுபோல, நாங்களும் மேல்முறையீடு செல்லும் வரை கட்டுமான பணியை நிறுத்த மாட்டோம்' என கர்நாடக அரசு கூறினால், ஸ்டாலின் என்ன செய்வார் என்பது எங்களின் கேள்வி. - கோவை சத்யன், தலைவர், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி
6 minutes ago
7 minutes ago