உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதிதிராவிடர் நலத்துறை யாருக்கானது? ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி கேள்வி

ஆதிதிராவிடர் நலத்துறை யாருக்கானது? ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி கேள்வி

சென்னை: 'பொது சமையலறை திட்டத்தின் கீழ் எழும் புகார்களை, ஆதிதிராவிடர் நலத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பூசி, மெழுகி, தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக பேசுவது, இத்துறை யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது' என, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமி, கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒப்புதல் அவரது அறிக்கை:

ஆதிதிராவிடர் நலத்துறை கீழ் சென்னையில் செயல்படும், 28 விடுதிகளில் படிக்கும், 3,500க்கும் அதிகமான மாணவர்களுக்கு, பொது சமையல் அறை திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்படுகிறது. இம்முறையில் வெளிப்படைத் தன்மையின்றி, 'டெண்டர்' கோரப் படாமல், நேரடியாக ஆந்திராவை சேர்ந்த, 'ஸ்ரீ ஹரி என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்திற்கு, அதிகாரிகள் ஒப்புதல் வழங்கி உள்ளனர். இந்நிறுவனம், அரசு நிர்ணயித்துள்ள உணவு பட்டியலின் கீழ் உணவு தயாரிக்காமல், ஹிந்தி பேசும் சமையலர்கள் வைத்து, இரண்டு இடங்களில் உணவு சமைத்து, மாணவர் களுக்கு விநியோகம் செய்கிறது. இத்திட்டத்தின் படி, தினசரி வருகைப் பதிவேட்டில், ஒரு மாணவருக்கு கூட, விடுப்பு அளிக்காமல், விடுதியில் அனுமதிக்கப்பட்ட, மொத்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உணவு கட்டணம், சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் வழியே, அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. உணவு கட்டணம் இதில் விடுமுறை நாட்கள், மாணவர்கள் விடுதியில் தங்காத நாட்களும் சேர்க்கப்பட்டு, உணவு கட்டணம் வழங்கப் படுகிறது. மேலும், தினசரி உணவு தரமாக உள்ளதாகவும், போதுமான அளவு வழங்கப்படுவதாகவும், அமுத சுரபி இணையதளத்தில் பதிவேற்றும்படி, விடுதி காப்பாளர்கள் கட்டாயப் படுத்தப்படுகின்றனர். அதேபோல், வருகைப் பதிவேட்டில், மாணவர்கள் தினசரி விடுதியில் தங்கி, உணவு அருந்துவதாக, பதிவு செய்ய வேண்டும் என, விடுதி காப்பாளர்களுக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல், உணவின் தரம் குறித்து, மாணவர்கள் பல்வேறு புகார்களை, அடுக்கி வருகின்றனர். ஆனால், துறை செயலர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், புகார்கள் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக பூசி, மெழுகி வருவது, இத்துறை யாருக்கானது என்ற, கேள்வியை எழுப்புகிறது. எனவே, அமைச்சர் மதிவேந்தன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ மீதான புகார்கள் மற்றும் விமர்சனங்களை, எளிதாக கடந்து சொல்லாமல், கூர்ந்து கவனித்து, துறையை பாழ்படுத்தி வரும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 12, 2025 11:11

பஞ்சமி நிலத்தை மீட்கணும் ன்னு குரல் கொடுத்தவர்.. ஆனா குடும்பக்கட்சியிடம் இருந்து என்ன மிரட்டல் வந்துச்சோ அப்புறம் குரல் கொடுக்கலை .....


Narayana Kumar
டிச 12, 2025 11:00

விடுதிகளை கண்காணிக்கும் பொறுப்பில் தாலுக்கா அளவில் வருவாய் துறை சேர்ந்த தனி வட்டாட்சியர் பொறுப்பில்உள்ளதால்... அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு விடுதிகளை கண்காணிப்பதில்லை மாறாக போலி உணவு பில்களை தயாரித்து பணத்தை கையாடல் செய்கின்றனர்... இதற்கு விடுதி காப்பாளர்கள் கணிசமான தொகையை அரசாங்கத்திடமிருந்து கொள்ளையடிக்கின்றன... அதனால் ஆதி திராவிடர் நலத்துறையால் நேரடியாக தனிவட்டாட்சியர்களை தண்டிக்க முடியவில்லை விடுதிகாப்பாளர்கள் கொள்ளையடிக்க தனி வட்டாட்சியர்கள் உடந்தையாக இருக்கிறார்கள் இதனால் மாணவர்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை கல்வித்துறையில் இருப்பது போல் BEO கண்ட்ரோல் இருப்பது போல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டு தவறு நடப்பின் துறை மூலமாக தண்டிக்கப்பட வேண்டும் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அமைச்சுப் பணியாளர்கள் ஆதிதிராவிடர்நலத்தறையில் இருப்பவர்களையே நியமிக்கப்பட வேண்டும் அனைவரும் தவறு செய்வதை துறை மூலமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பாக இருக்கும்


கரீம் பாய், ஆம்பூர்
டிச 12, 2025 10:14

ஓங்கோல் அப்டின்னா diruttu திராவிடம். வேறு எவனுக்கும் இல்லை. நாளை நமதே 234 லும் நமதே..


Barakat Ali
டிச 12, 2025 10:02

திமுக பட்டியலின மக்களுக்குச் செய்யும் அநீதி.. துரோகம் .... இழிவு படுத்தல் ..... நன்றி சிவகாமி மேம் ....


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 12, 2025 09:54

என்ன இது திடீரென்று? நீங்கள் திமுக ஆதரவாளராகவும் அனுதாபியாகவும் பற்றாளராகவும் இருந்தீர்கள் என்பது உங்களுக்கே மறந்துவிட்டதா? தேர்தல் நெருங்குவதால் " என்னை மறந்து விடாதீர்கள்" என்ற சிக்னலா?


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 12, 2025 11:04

அவர் எப்போதும் திமுக அனுதாபி அல்லர்... சொல்லப்போனால் 2022 இல் சென்னை மாநகராட்சித் தேர்தலுக்கு - வார்டு 99 - அதிமுக டிக்கெட் பெற்றதாக ஞாபகம்.. அவர் பட்டியலின மக்களுக்காக சமூக சமத்துவப்படை என்னும் கட்சியைத் துவக்கினார். அப்படியே ஒரு காலத்தில் இருந்திருந்தாலும் ஆயுள் முழுவதும் திமுக அனுதாபியாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் உங்களுக்கு இருக்கலாம் .... அவருக்கு இல்லை .....


Gajageswari
டிச 12, 2025 09:40

எதுவும் இலவசமாக வழங்கப்பட்டால் இப்படி தான் இருக்கும். வருகை பதிவேட்டில் உள்ள படி மாணவர்கள் வங்கி கணக்கில் பணமாக வழங்கிவிடலாம்


karthik
டிச 12, 2025 08:44

புகார் செய்துள்ளீர்கள் சரி அது என்ன இடையில் ஹிந்தி பேசும் சமையலர் வைத்து என்று உங்கள் மொழி வெறியை தினித்துள்ளீர்கள்? இது தான் தமிழர்களின் பிரச்சனை ஒற்றுமை என்பது பல ஆயிரம் ஆண்டுகளாகவே இல்லை. ஊழலை எதிர்த்து கேள்வி கேளுங்கள் ஒற்றுமையை குலைக்கும் விதத்தில் செயலாற்றாதீர்கள். வடமாநிலத்தவர் இல்லை என்றால் இன்று தமிழ் நாட்டில் உடல் உழைப்பு வேலைக்கு ஆட்களே இல்லை..கட்டுமானம் ஓட்டல்கள் சாலைப்பணி விவசாயம் ஆடை உற்பத்தி இப்படி அனைத்துமே அவர்களை நம்பி தான் இருக்கிறது


raja
டிச 12, 2025 08:29

ஒத்த டோலக்கொட பஞ்சம் பிழைக்க வந்த குடும்பம் இப்போ ஒட்டு மொத்த தமிழகத்தையும் சுரண்டி கொழுத்து விட்டது....


VENKATASUBRAMANIAN
டிச 12, 2025 08:24

இதுதான் திராவிட மாடல். இவர்தான் திமுக அனுதாபி ஆயிற்றே. நேரடியாக கேட்க வேண்டியதுதானே.


G Mahalingam
டிச 12, 2025 07:15

அரசு அலுவலரை மிரட்டி திமுகவினர் தன் வேலையை செய்து கொள்கின்றனர். அரசு அலுவலகங்கள் அத்தனையிலும் நடக்கிறது. திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தன்னிச்சையான செயல் படும் என்று வெளியில் சொல்வார்கள் ஆனால் திமுகவினர் அழுத்தம் கொடுப்பார்கள். இதுதான் நடக்கிறது. இந்த ஆட்சி ஒரு கொடுங்கோலன் ஆட்சி


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை