உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரபா பகுதியை கைப்பற்றிய இஸ்ரேல் போர் நிறுத்த பேச்சில் இழுபறி

ரபா பகுதியை கைப்பற்றிய இஸ்ரேல் போர் நிறுத்த பேச்சில் இழுபறி

கெய்ரோ :போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படாமல் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில், எகிப்துஉடனான ரபா எல்லையில் உள்ள காசா பகுதியின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் பீரங்கிப்படை நேற்று கைப்பற்றியது.மேற்காசியாவில் உள்ள இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக் கொண்டு வர தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. கெய்ரோவில் இரு தினங்களுக்கு முன் நடந்த கடைசி பேச்சில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.போர் நிறுத்தப்பேச்சு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில், காசாவில் உள்ள ரபா எல்லைப் பகுதியை இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்தன. அங்கு ஹமாஸ் படையினர் இருப்பதாக சந்தேகிக்கும் பகுதிகளை குறிவைத்து குண்டு வீசப்பட்டு வருகிறது. இதில், ஆறு பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட, 23 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ரபாவில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் படைகள் தயாராக உள்ளன.முன்னதாக பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை துவங்கியுள்ளது. எகிப்திலிருந்து பாலஸ்தீனத்துக்குள் செல்வதற்கான ஒரே வழி ரபா எல்லை பகுதி தான், தற்போது அந்த பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியுள்ளது. இருதரப்பும் மாறி மாறி தாக்குதலை தீவிரப்படுத்துவதால் போர் நிறுத்த பேச்சில் முடிவு எட்டப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

NAGARAJAN
மே 09, 2024 06:38

இஸ்ரேல் போன்ற பயங்கரவாத நாட்டை முதலில் தடை செய்ய வேண்டும் அதற்கு துணை போகும் அமெரிக்கா எனும் மிக பயங்கரவாத நாட்டையும் ‌ இவர்கள் செய்யும் அராஜகம் அதிகம்


Kasimani Baskaran
மே 08, 2024 05:18

இன்னும் சிறைபிடித்து வைத்திருக்கும் பொதுமக்களை ஹமாஸ் விடுவதாக இல்லை ஆகவே இஸ்ரேலின் நடவடிக்கை சரியானதே அதே சமயம் அப்பாவி பொது மக்களின் பாதுகாப்புக்கு யாரும் உத்திரவாதம் கொடுக்கவில்லை என்பது மகா கேவலமான அணுகுமுறை சமாதானம் வேண்டும் என்றால் ஹமாஸ் இயக்கத்தை அரபு நாடுகள் தியாகம் செய்வதைத்தவிர வேறு வழியில்லை


J.V. Iyer
மே 08, 2024 04:50

போரை எளிதாக நிறுத்தலாம் பிணைக்கைதியாக பிடித்த எல்லா இஸ்ரேலியர்களையும் திரும்ப அனுப்பி ஹமாஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்தால் உடனே போர்நிறுத்தம் நடைபெறும் இது ஒரு சின்ன குழந்தைக்குக்கூடத் தெரியும் பயங்கரவாதத்திற்கு என்றுமே நாடுகள் பின்வாங்கக்கூடாது பயங்கரவாதம் முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும் இதற்குத்துணைப்போகும் மக்களும் பாயங்கரவாதிகளே இதில் அப்பாவிகள் என்று யாரும் கிடையாது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை