உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தேசிய காவல் படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு: கிரீன் கார்டு சேவை மறு ஆய்வுக்கு டிரம்ப் உத்தரவு

தேசிய காவல் படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு: கிரீன் கார்டு சேவை மறு ஆய்வுக்கு டிரம்ப் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் தேசிய காவல் படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால், கிரீன் கார்டு சேவையை மறுஆய்வு செய்யுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஹ்மானுல்லா லகன்வால் என்பவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில், மேற்கு வர்ஜீனியா தேசிய காவல்படையின் இரண்டு வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார் என்பதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார்.துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தொடர்பான அனைத்து குடியேற்ற கோரிக்கைகளையும், உடனடியாகவும் காலவரையின்றியும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தன. தற்போது கிரீன் கார்டு வைத்திருப்பவர்களின் ஆவணங்கள் மறுபரிசீலனை செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.இது பற்றி குடிவரவு சேவைகள் இயக்குனர் ஜோசப் எட்லோ கூறியதாவது: இந்த நாட்டையும், அமெரிக்க மக்களையும் பாதுகாப்பது மிக முக்கியமானது. முந்தைய நிர்வாகத்தின் பொறுப்பற்ற குடியேற்றக் கொள்கைகளால் ஏற்படும் பாதிப்புகளை அமெரிக்க மக்கள் ஏற்க மாட்டார்கள். அமெரிக்கர்கள் பாதுகாப்பு என்பது சமரசத்துக்கு உட்பட்டது அல்ல. இவ்வாறு ஜோசப் எட்லோ கூறினார்.

எந்த நாடுகள் பாதிக்கப்படும்?

எந்த நாடுகள் பாதிக்கப்படும் என்று கேட்டபோது, ​​ஜூன் மாதத்தில் டிரம்ப் பயணத் தடை விதித்த நாடுகளின் பட்டியலை ஜோசப் எட்லோ சுட்டிக்காட்டினார். இவற்றில் ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, மற்றும் வெனிசுலா ஆகியவை அடங்கும்.இதற்கு முன்னர், ஜோ பைடனின் ஆட்சியின் கீழ் நாட்டிற்கு வந்த அனைத்து ஆப்கானிய நாட்டினரையும் மறுபரிசீலனை செய்யுமாறு அதிபர் டிரம்ப் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். தற்போது இந்த விஷயத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோசப் எட்லோ தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

raja
நவ 28, 2025 08:12

கண்டிப்பாக மார்கத்தவற்களை எவராக இருந்தாலும் சொந்த நாட்டுக்காரர்களாக இருந்தாலும் கண்காணிப்பில் எந்நேரமும் வைத்து இருக்க வேண்டும் ... ஏன் என்றால் இந்தியாவில் மருத்துவம் படித்த மார்கத்தவர்களே தற்கொலை படை மத தீவிரவாதிகளாக மாறி பல உயிர்களை கொல்வதால் அவர்களுக்கு மனித நெயம் என்பதே கேள்வி குறித்து மதம் ஒன்று மட்டுமே குறிக்கோளாக வெறியுடன் இருக்கிறார்கள் படித்தவர்களே இவ்வாரெண்றால் படிகாதவற்களை இலகுவாக மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றி கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை....


sekar ng
நவ 28, 2025 08:05

வன்முறை க்கு தான் விலை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை