உள்ளூர் செய்திகள்

/ கனவு இல்லம் / ஆலோசனை / துரு ஏறிய கம்பி கட்டுமானத்துக்கு ஆகாது லோடு வந்திறங்கும்போதே செக் செய்ய வேண்டும்

துரு ஏறிய கம்பி கட்டுமானத்துக்கு ஆகாது லோடு வந்திறங்கும்போதே செக் செய்ய வேண்டும்

கட்டடத்தில் கான்கிரீட் போடப்படும் அனைத்து இடங்களிலும், கம்பிகள் உள்ளீடாக வைக்க வேண்டிய அவசியமாகிறது. ஆனால், இந்த இடங்கள் ஒவ்வொன்றும் அதன் அமைவிடம் அடிப்படையில், வேறுபடுவதற்கு வாய்ப்புள்ளது.குறிப்பாக, அஸ்திவாரத்தின் அடித்தள பகுதியில், என்ன வகை கம்பி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்தால் போதும்; அனைத்து பாகங்களுக்கும் அதே கம்பியை பயன்படுத்தலாம் என்பது, பலரின் கருத்து. அஸ்திவாரத்தின் அடித்தளத்தில் பயன்படுத்தப்படும் கம்பி, கட்டடத்தின் பிற பாகங்களுக்கு பொருந்தாது. துாண்களுக்கும், பீம்களுக்கும் கூட ஒரே வகை கம்பிகளை பயன்படுத்த முடியாது என்பதை உணர வேண்டும். கட்டடத்தின் மொத்த சுமை என்ன என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப தாங்கும் திறன் உடைய கட்டட அமைப்பியல் பொறியாளர் வழிகாட்டுதலில், தேர்வு செய்ய வேண்டும். இதில், 10 மி.மீ., கம்பிகளை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்ட இடத்தில், செலவு குறைப்பு என்ற கோணத்தில், அதை விட குறைந்த வகை கம்பிகளை பயன்படுத்தக் கூடாது. சில சமயங்களில், கடையில் அந்த குறிப்பிட்ட வகை கம்பிகள் கிடைக்காத நிலையில், குறைந்த எடையுள்ள கம்பிகளை கூடுதல் எண்ணிக்கையில், பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.இதுபோன்ற நிலையில், பரிந்துரைக்கப்பட்டதற்கு மாற்றாக வேறு கணக்கில் கம்பிகளை தேர்வு செய்து பயன்படுத்தினால், அது சார்ந்த பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். குறிப்பாக, துாண்கள், பீம்களில் ஒரு கம்பியுடன் நீட்சியாக இன்னொரு கம்பியை இணைத்து, பயன்படுத்த வேண்டியது வரும்.இத்தகைய சூழலில், இரண்டு கம்பிகளையும் சேர்த்து வைத்து முறுக்கு கம்பிகளை பயன்படுத்தி இணைத்தால் போதும் என்று பலர் நினைக்கின்றனர். இதுபோன்ற இணைப்புகள், கான்கிரீட் கலவை கொட்டப்படும்போது, விலகாமல் நிலைத்து நிற்குமா என்பது கேள்விக்குறி.எனவே, இதுபோன்ற இணைப்பு இடங்களில் கம்பிகளின் நுனியில் திருகு ஏற்படுத்த நவீன கருவிகள் வந்து விட்டன. இதை பயன்படுத்தி, திருகு அடிப்படையில் டி.எம்.டி., கம்பிகளை இணைத்து கான்கிரீட் கட்டுமான பணி மேற்கொள்வது, நிலைப்பு தன்மையை உறுதி செய்யும். கட்டுமான பணிக்கான கம்பிகளில், துரு இருக்கிறதா என்று பாருங்கள். மழையில் போட்டு வைத்த கம்பி அதில் கலந்து வந்திருந்தால், உடனடியாக திருப்பி அனுப்பி விட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை