உள்ளூர் செய்திகள்

ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு

மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் அஞ்சலியை அழைத்துப் போக வருமாறு, லதாவிற்கு பள்ளியில் இருந்து அழைப்பு! பள்ளிக்கு சென்ற லதாவிற்கு, 'உங்கள் மகள் பருவம் எய்திவிட்டாள்' என்ற செய்தி, இடியாய் இறங்கியிருக்கிறது. எட்டு வயது குழந்தைக்கு இதை எப்படி புரிய வைப்பது; எதையெல்லாம் சொல்லிக் கொடுப்பது; முதலில் அவளுடைய அழுகையை எப்படி சமாதானம் செய்வது என்ற பெரும் குழப்பம் லதாவுக்கு!இன்று, அஞ்சலியை அழைத்துக்கொண்டு என்னிடம் வந்திருந்தார் லதா. 'இயல்பான உதிரப்போக்கை, 'வியாதி' என நினைத்து பயந்து, மனஅழுத்தத்திற்கு அஞ்சலி ஆளாகிவிட்டாள்' என்றார்.தற்போதெல்லாம், பத்து வயதிற்குள் பருவம் எய்துவது என்பது மிகச்சாதாரண நிகழ்வாகி விட்டது! பொதுவாக, உடலும், உள்ளமும் வளர்ச்சியடைவதற்கு முன்பே பருவம் எய்துவதை, 'முன் பூப்படைதல்' என்கின்றனர். மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் தூண்டலினால், சினைப்பையில் சுரக்கும் 'ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன்தான் பூப்படைவதற்கு காரணமாகிறது.தற்போது, நம் அன்றாட உபயோகங்களில் இருக்கும் வேதிப்பொருட்கள், இந்த ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதாலும், செயற்கை உரங்களால் விளைந்த உணவுகள், 'ஈஸ்ட்ரோஜென்' போன்று செயல்படுவதாலும், 'முன்பூப்படைதல்' நிகழ்கிறது. மேலும், குழந்தைகளுக்கு விருப்பமான, பொறித்த கோழி, இறைச்சி மற்றும் துரித உணவுகளும், இந்நிகழ்வுக்கு காரணமாகின்றன.பெண் குழந்தைக்கு எட்டு வயது ஆகிவிட்டது என்றாலே, 'வயதுக்கு வந்துவிடுவாளோ?' என, இன்றைய நவீன அம்மாக்கள் கவலைப்பட ஆரம்பித்து விடுகின்றனர். 'தான் யார்' என்பதை அறிந்து, புரிந்து கொள்வதற்குள், பூப்பெய்திவிட்ட ஒரே காரணத்தால், 'இவள் பெண்' என்ற முத்திரை இன்றைய சிறுமிகளின் மீது குத்தப்படுகிறது. இது, மிகவும் வேதனைக்குரிய ஒன்று!அஞ்சலிக்கு, அவள் உடல்நிலையில் நிகழ்ந்திருக்கும் மாற்றம், அவளது தோழிக்கும் ஏற்படும் என்பதை, உதாரணமாக சொல்லி புரிய வைத்தாகி விட்டது. தற்போது, தன் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டாள் அஞ்சலி.- டாக்டர். ரா.ருக்மணி,பெண்கள் நல மருத்துவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்