உள்ளூர் செய்திகள்

அதிக இனிப்பு சாப்பிட்டால் மாத்திரையை கூட்டலாமா?

ஆண்களுக்கு தசை வளர்ச்சி அதிகம் என்பதால், அதிக அளவு புரதச்சத்து மற்றும் கலோரி தேவைப்படும். சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க முடியாத காரணங்களால் இனிப்பு எடுத்துக் கொள்ளும் போதும், உணவின் அளவு அதிகரிக்கும் போது அதற்கு தகுந்தாற்போல், மருந்தின் அளவை அதிகரித்து கொள்ளலாமா என்ற சந்தேகம் உள்ளது. சர்க்கரை நோய்க்கு மருந்தின் அளவை நாமாக, முடிவு செய்வது மிகவும் தவறான ஒன்று. எந்த வகை இனிப்பை எவ்வளவு எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்தும், உணவின் அளவை பொறுத்தும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. அதற்கு எந்த அளவு மருந்து தேவைப்படும் என்பது, மருத்துவருக்கு மட்டுமே தெரியும். நாமே மருந்துகளின் அளவை அதிகப்படுத்தும்போது, சில சமயம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து, லோ சுகர் ஏற்பட வாய்ப்புள்ளது. இது உயிருக்கே ஆபத்தானதாக முடிந்து விடும். நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது? பல வைட்டமின்கள் மற்றும் தாவர உணவுகள், நமது உடலில் நோய் எதிர்ப்பு தியை து4ண்டுகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை என ஆன்டிஆக்சிடென்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி, தாதுப்பொருட்கள் செலினியம், குளோடாதியோன் உள்ளிட்டவற்றை கூறலாம். இவை உடலில் உள்ள டி செல்களை தூண்டி, நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்கிறது. இதில் வைட்டமின் சி அதிவேகமாக வேலை செய்து வைரஸ் கிருமிகளை உடலில் போகாமல் பாதுகாக்கிறது. இந்த சத்துப் பொருட்கள் பூண்டு, வெங்காயம், பழங்கள், காளான், கீரை மற்றும் காய்கறிகள், முழுமையான தானியம் மற்றும் பயிறு வகைகள், ஓட்ஸ், சோயாபீன்ஸ், மீன் போன்றவற்றில் நிறைந்துள்ளது. இவை புற்றுநோய் கட்டி, இருதய பாதிப்பு, நீரிழிவு நோய் முதல் ஜலதோஷம் வரை அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. கலோரி அளவு தெரியுமா?விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு, ஒருநாளுக்கு தேவைப்படும் கலோரி அளவு என்பது விளையாட்டு, விளையாடும் நேரம், வயது என்பதை பொறுத்து மாறுபடும். ஒரு நாளைக்கு குறைந்தது, 2,200 கிராம் கலோரி தேவைப்படும். உதாரணமாக ஒரு விளையாட்டில் ஈடுபடும், 10 வயது சிறுவனுக்கு, 1,600 2,400 கிராம் கலோரி வரை தேவைப்படும். 1012 வயது வரை உள்ள பெண்களுக்கு, இந்த அளவுடன் கூடுதலாக, 200 கிராம் கலோரியும், ஆண்களுக்கு, 500 கிராம் கலோரியும் தேவைப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !